கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்

Qries

– Advertisement –

இன்றைய பல குடும்பங்களில் தலைவிரித்தாடும் மிகப் பெரிய பிரச்சனை எனில் அது கடன் தொல்லையாக தான் இருக்கும். ஏனெனில் மற்ற பிரச்சனைகள் அனைத்தும் இந்த கடனை தொடர்ந்து தான் வந்து கொண்டிருக்கும். கடன் என்ற ஒன்று இல்லை என்றாலே இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்பது மட்டும் உறுதி.
ஆனால் அப்படி வாழ்வதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு. அதையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். சரி ஏதோ ஒரு சூழ்நிலையில் கடன் வாங்கி விட்டோம் அதை இப்பொழுது அடைக்க முடியாமல் துன்பப் படுகிறோம் அதற்கு என்ன செய்வது என்று கேட்கிறார்களா? இதோ ஒரு அற்புதமான மந்திர வழிபாட்டு முறை உள்ளது.
– Advertisement –

இதை தொடர்ந்து செய்யும் போது கடன் அடைவதற்கான வாய்ப்பு பெருகும் என்று சொல்லப்படுகிறது. இந்த மந்திர வழிபாட்டை எப்போது எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் மந்திரம் குறித்த இந்த பதிவில் நான் தெரிந்து கொள்ளலாம்.
கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்
இந்த மந்திர வழிபாட்டை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். இதை துவங்கும் நாளன்று அதிகாலை நேரத்தில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு அதன் பிறகு சொல்ல ஆரம்பியுங்கள். இதோ நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்.
– Advertisement –

ஓம் அபர்னாய நமஹ
இந்த ஒரு மந்திரத்தை தான் நீங்கள் சொல்ல வேண்டும். முதல் நாள் மட்டும் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு ஐந்து முறை சொல்லுங்கள். அதன் பிறகு நாள் முழுவதிலும் உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.
இந்த மந்திரத்தை சொல்லும் போது உங்களுக்கு எத்தனை கடன் இருக்கிறதோ அது அனைத்தும் அடைய வேண்டும் என்பதையெல்லாம் மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டே சொல்லுங்கள். அப்படி உங்களால் நினைத்த நேரத்தில் எல்லாம் இந்த மந்திரத்தை சொல்ல முடியாது என்றால் தினமும் காலை வேளையில் விளக்கு ஏற்றி வைத்த பிறகு அப்போது சொன்னால் போதும்.
– Advertisement –

ஒரு நாளைக்கு ஒரு முறை தான் இந்த மந்திரத்தை சொல்லப் போகிறீர்கள் என்றால் 21 முறை 54 முறை அல்லது 108 முறை என்று இந்த கணக்கில் சொல்லுங்கள். இதை நாள் முழுவதும் சொல்வதாக இருந்தால் தான் காலை ஐந்து முறை மட்டும் சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
இந்த மந்திர வழிபாடு என்பது மிக மிக எளிமையான ஒன்று தான். ஆனால் இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக சொல்லப்படுகிறது. ஏனெனில் அபர்ணய நமஹ என்று இதில் வரக் கூடிய அபர்ணா என்ற வார்த்தை லலிதா பரமேஸ்வரி அன்னையை குறிக்கிறது. கடன் அடைய நாம் அவர்களை தினந்தோறும் வேண்டும் போது 48 நாட்கள் நம்மளுடைய கடன் முழுவதுமாக அடைவதற்கான யோகத்தை அன்னை அருள்வாள் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: பிரச்சனைகள் தீர பைரவர் மந்திரம்
இந்த மந்திர வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் வழிபட்டால் நிச்சயம் நல்ல பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருக்குமெனில் நீங்களும் வழிப்பட்டு பலன் அடையலாம்.

– Advertisement –

Qries
Scroll to Top