காரிய வெற்றி ஏற்பட ஹனுமன் மந்திரம்

Qries

– Advertisement –

காலையில் கண்விழித்ததும் இன்றைய பொழுதில் நாம் செய்யக்கூடிய வேலைகள் என்னென்ன அந்த வேலைகளை எப்படி செய்து முடிப்பது என்ற எண்ணம் நமக்கு தோன்றும். ஒரு சிலருக்கு முதல் நாள் இரவே இந்த நினைப்பு வந்துவிடும். முக்கியமான வேலையாக இருந்தாலும் சரி அன்றாட வேலையாக இருந்தாலும் சரி அந்த வேலைகளில் எந்த வித தடைகளும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கும். அப்படி செய்யக்கூடிய காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கவும் அந்த காரியத்தில் வெற்றியை பெறவும் சொல்லக்கூடிய ஹனுமன் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காக்கும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் இருந்தாலும் மிகவும் எளிமையான முறையில் நாம் வழிபாடு செய்தாலே நம்மை காக்கக்கூடிய தெய்வங்கள் என்று பார்த்தால் முதலில் நம் நினைவிற்கு வருவது விநாயகரும், அனுமனும் தான். விநாயகரை எதில் பிடித்து வைத்தாலும் அவர் மகிழ்ச்சியாக வந்து அமர்ந்து கொள்வார் என்பதால் அவர் எளிமையான கடவுள் என்று கூறப்படுகிறது.
– Advertisement –

அதே போல் தான் அனுமனும் அனுமனையும் நாம் ஹனுமான் ஆஞ்சநேயா என்று கூற வேண்டிய அவசியமே இல்லை. ராமா ராமா என்று கூறினாலே அனுமன் வவந்துவிடுவார். தனால் தான் இவர்கள் இருவரையும் மிகவும் எளிமையான கடவுள் என்று நாம் கூறுகிறோம். இவர்களுக்காக தனியாக நாம் நெய்வேத்தியம் செய்வது தீபம் ஏற்றுவது என்று எதுவுமே தேவையில்லை.
எந்த தெய்வத்தையும் நாம் மனதார நினைத்தோம் என்றால் அவர்களின் அருள் கிடைக்கும் என்றாலும் அந்தந்த தெய்வத்திற்குரிய வழிபாட்டு முறைகளை பின்பற்றும் போது அதன் பலன் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறுவோம். ஆனால் இந்த இரண்டு தெய்வத்திற்கும் வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற அவசியமே இல்லை. இவர்களை மிகவும் எளிமையாக நாம் வழிபடலாம். அந்த வகையில் ஹனுமனை நினைத்து நாம் எந்த மந்திரத்தை கூறினால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய காரிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்று பார்ப்போம்.
– Advertisement –

இந்த மந்திரத்தை நாம் தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு கூறவேண்டும். பூஜை அறையில் அமர்ந்து தான் கூற வேண்டும் என்ற அவசியமே இல்லை. நாம் எங்கு வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். ஒரே ஒரு நிபந்தனை காலையில் குளித்து இருக்க வேண்டும். இது மட்டும்தான்.
தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அனுமனை மனதார நினைத்து ஒன்பது முறை இந்த மந்திரத்தை நாம் கூறி வந்தோம் என்றால் நம்முடைய வாழ்விலும் அன்றைய தினத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான காரியங்களும் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
– Advertisement –

மந்திரம்
“ஓம் நமோ பகவதே ஸ்ரீராமா ராம தூதாய அனுமனாகிய வாயு குமாரா நமஹ”
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் கூறுபவர்களுக்கு ராமபிரானின் அருளும் அதே சமயம் ஹனுமனின் அருளும் பரிபூரணமாக கிடைத்து செல்லும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: பணவரவை அதிகரிக்க மகாலட்சுமி மந்திரம்
நம்பிக்கையுடன் அனுமனை நினைத்து இந்த மந்திரத்தை கூறி காரிய வெற்றி பெறுவோம்.

– Advertisement –

Qries
Scroll to Top