கிருத்திகை நட்சத்திரத்தில் கூற வேண்டிய முருகன் மந்திரம்

கிருத்திகை நட்சத்திரத்தில் கூற வேண்டிய முருகன் மந்திரம்

Qries

– Advertisement –

நாம் அனைவருமே அன்றாடம் நாம் தொடங்கக்கூடிய நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதற்காக தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். ஒவ்வொருவரும் அவர்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்வதைப் போலவே இஷ்ட தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வார்கள். இதோடு அன்றைய தினத்தில் என்ன திதி இருக்கிறது? என்ன நட்சத்திரம் இருக்கிறது? அதற்குரிய தெய்வம் எது? என்பதை பார்த்தும் சிறப்பு வழிபாடுகளை செய்வது உண்டு. அந்த வகையில் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. அன்றைய நாளில் முருகப்பெருமானை நினைத்து எந்த மந்திரத்தை கூறினால் வேண்டிய வரம் கிடைக்கும், கஷ்டங்கள் தீரும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகன் மந்திரம்
கலியுகத்தின் தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்றும் பலரது இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வமாகவும் அருள் பாலிக்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த காலகட்டத்தில் பலவிதமான அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய தெய்வமாகவும் முருகப்பெருமான் திகழ்கிறார். முழு மனதோடு முருகப்பெருமானை வழிபாடு செய்தாலே நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முருக பெருமானுக்கு உகந்த விரதங்கள் ஒன்றாக திகழ்வதுதான் கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாளில் இருக்கும் விரதம். இந்த விரத சமயத்தில் முருகப்பெருமானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்தோம் என்றால் அதற்கு அதிக அளவில் பலன் என்பது இருக்கிறது.
– Advertisement –

ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி மதியம் 3 மணிக்கு பிறகுதான் கிருத்திகை நட்சத்திரம் என்பது தொடங்குகிறது. இது பத்தாம் தேதி 1 30 மணி வரை இருக்கிறது. அதனால் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் ஒன்பதாம் தேதியில் விரதத்தை ஆரம்பித்து 10ஆம் தேதி நிறைவு செய்ய வேண்டும். மேலும் இந்த நேரத்தில் தான் வைகுண்ட ஏகாதசியும் இருக்கிறது என்பதால் முருகப்பெருமானுக்கும் பெருமாளுக்கும் ஒருசேர நாம் விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இந்த சிறப்பு மிகுந்த நாளில் முருகப்பெருமானுக்காக நாம் விரதம் இருக்கும் பொழுது கண்டிப்பான முறையில் முருகப் பெருமானுக்கு நாம் வழிபாடுகளை செய்வோம். வீட்டிலேயே முருகப்பெருமானின் 108 போற்றிகளை அர்ச்சனை செய்வது, வீட்டில் வேல் அல்லது முருகனின் சிலை இருக்கும் பட்சத்தில் அபிஷேகம் செய்வது, நெய்வேத்தியம் வைப்பது என்று நமக்குத் தெரிந்த அளவிற்கு முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்வோம். விரதம் இருக்க இயலாதவர்கள் கூட அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.
– Advertisement –

அவ்வாறு நாம் வழிபாடு செய்த பிறகு முருகப்பெருமானை நினைத்து கூற வேண்டிய முக்கியமான இரண்டு மந்திரங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு மந்திரங்களை நாம் கூறும்பொழுது நமக்கு எப்பேற்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அந்த கஷ்டத்தில் இருந்து நம்மை முருகப்பெருமான் காப்பாற்றுவார் என்றும் நாம் என்ன வேண்டுதலை நினைத்து அந்த விரதத்தை இருக்கிறோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். மனதிற்குள் கூறிக் கொண்டே இருக்கலாம். வழிபாடு செய்யும்பொழுது குறைந்தது ஆறு முறையாவது கூற வேண்டும். அதிகபட்சம் 108 முறை கூட கூறலாம்.
மந்திரம்
“காக்க காக்க கனகவேல் காக்க
– Advertisement –

ஓம் சுப்ரமணியாய நமஹ”
இதையும் படிக்கலாமே:புத்திசாலித்தனத்துடன் சிறப்பான வாழ்க்கை வாழ
முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து கிருத்திகை நட்சத்திர நாளில் இந்த இரண்டு மந்திரங்களையும் கூறுபவர்களுடைய வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டத்தில் இருந்து முருகப்பெருமான் காப்பாற்றுவார். மேலும் வேண்டிய வரத்தையும் அருள்வார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top