குடும்பத்திற்கு தீங்கு நேராமல் இருக்க மந்திரம்

குடும்பத்திற்கு தீங்கு நேராமல் இருக்க மந்திரம்

Qries

– Advertisement –

முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானே ஒரு கணம் மனதார நினைத்தாலே போதும் அவர் அங்கு எழுந்தருளி நம்முடைய குறைகளை கேட்டருள்வார். எளியவர்க்கும் எளிமையாய் காட்சி தரக்கூடிய விநாயகரை பக்தர்கள் நினைத்தவுடன் காணத் தான் அவர் வீதி எங்கும் வீற்றிருக்கிறார். அப்படியான விநாயகருக்கு உகந்த திதிகளில் ஒன்று சதுர்த்தி. அதுவும் தேய்பிறையில் வரக்கூட சங்கடஹர சதுர்த்தி திதியில் அவரை வழிபட்டால் கூடுதல் பலனை பெறலாம்.
இன்றைய தினம் அந்த சதுர்த்தி நாள் அதுவும் சனிக்கிழமை உடன் வந்திருக்கக் கூடிய இந்த சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்கும் போது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீரும். அத்துடன் இந்த சதுர்த்தி வழிபாட்டின் போது விநாயகரின் மந்திரத்தை சொன்னால் நம்முடைய குடும்பத்திற்கு எந்தவித தீங்கும் நேராது விநாயகர் காப்பார் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
– Advertisement –

துன்பம் நேராமல் இருக்க விநாயகர் மந்திரம்
இன்றைய தினம் காலை துவங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வரை சதுர்த்தி திதி உள்ளது. விநாயகரை இந்த நாளில் வணங்க மாலை நேரமே உகந்தது. பெரும்பாலும் சதுர்த்தி வழிபாடு ஆலயங்களில் கூட மாலை நேரத்தில் தான் நடைபெறும். ஆகவே இந்த வழிபாட்டையும் நீங்கள் மாலை நேரத்திலே செய்யுங்கள் சிறந்த பலனை பெறலாம்.
இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலே எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு விரதத்தை துவங்கி விடுங்கள். விரதம் இல்லாதவர்கள் கூட இந்த வழிபாட்டை மாலை நேரத்தில் மட்டும் செய்யலாம். ஆனால் இன்றைய தினம் அசைவத்தை தவிர்த்து விடுங்கள். மாலை நேரத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் எந்த விநாயகராக இருந்தாலும் அவருக்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள்.
– Advertisement –

ஒரு வேளை விநாயகர் சிலையே இல்லை என்றாலும் பரவாயில்லை படம் இருந்தாலும் அதற்கு அருகம்புல் மாலை போடலாம் அல்லது சிறிதளவு அருகம்புல்லை வைக்கலாம். விநாயகருக்கு நெய்வேத்தியமாக ஏதேனும் ஒரு எளிமையான பொருளை செய்து விடுங்கள். அப்படி முடியாத பட்சத்தில் அச்சு வெல்லம், பொட்டுக்கடலை, திராட்சை பேரீச்சம் பழம் இப்படியானவற்றை கூட வைக்கலாம்.
இப்போது விநாயகர் படத்திற்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைக்க வேண்டும் இந்த தீபம் கிழக்குப் பார்த்து எரியட்டும். நீங்கள் வடக்கு பார்த்த அமர்ந்து கொள்ளுங்கள். இப்போது விநாயகரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அடுத்து விநாயகரின் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
– Advertisement –

ஓம் கம் கணபதியே நமஹ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இப்படி சொல்லும் வேளையில் உங்களிடம் அருகம்புல் அதிகமாக இருப்பின் அதை வைத்து அர்ச்சனை செய்வது மேலும் நல்ல பலனை கொடுக்கும்.
மந்திரத்தை சொல்லி முடித்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். விரதம் வழிபடுபவர்கள் இந்த நெய்வேத்தியத்தை உண்ட பின்பு தான் மற்ற உணவுகளை சாப்பிட வேண்டும். விநாயகரை வழிபடும் இந்த முறை மிக மிக எளிமையானது தான். சதுர்த்தி நேரத்தில் சொல்லப்படும் இந்த மந்திரம் தான் மிகவும் முக்கியமானது.
இதையும் படிக்கலாமே: சுக்கிரனின் அஸ்தமனத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
இன்றைய தினம் விநாயகரின் அருளை பரிபூரணமாக பெற இந்த மந்திர வழிபாடு உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் விநாயகரை வழிபட்டு உங்கள் குடும்பத்தை எந்த தீங்கும் அண்டாமல் காத்துக் கொள்ளுங்கள்.

– Advertisement –

Qries
Scroll to Top