சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

Qries

– Advertisement –

செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் பலர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். என்ன வேலையாக இருந்தாலும் அந்த வேலையின் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியுமா? அந்த பணத்தை வைத்து குடும்பத்தை நல்ல முறையில் நடத்த முடியுமா? என்று யோசித்து அந்த வேலையை செய்து தங்களையும் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் நிறைவான வாழ்க்கை வாழ வைப்பதற்காக போராடிக் கொண்டு இருக்கும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். என்னதான் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாரித்தாலும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்று நினைத்து அந்தப் பிரச்சினைகளை சரி செய்வதற்காக பலரும் பாடுபடுவார்கள்.
இப்படி நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தாலும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான அதிர்வலைகள் இருக்கும். அந்த அதிர்வலைகளின் மூலமே நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். அதோடு எந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை நாம் உச்சரிக்கிறோமோ அந்த தெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதுதான் சாதாரண வழிபாட்டிற்கும் மந்திர வழிபாட்டிற்கும் இடையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு விஷயமாகும். அப்படி செய்யக்கூடிய மந்திர வழிபாட்டை முழு நம்பிக்கையுடனும் மனதை ஒருநிலைப்படுத்தியும் செய்ய வேண்டும் என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. மனதை ஒரு நிலைப்படுத்தாமல் செய்யக்கூடிய எந்த வழிப்பாடும், மந்திர ஜபங்களும் எந்தவித பலனையும் தராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் விநாயகப் பெருமான். விநாயகப் பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது எந்த மந்திரத்தை நாம் முழுமனதோடு எப்படி கூறினால் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் நம்மால் பெற முடியும் என்றுதான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
– Advertisement –

இந்த மந்திரத்தை திங்கட்கிழமை, சதுர்த்தி போன்ற நாட்களில் செல்ல ஆஆரம்பிக்கலாம். இந்த இரண்டு நாட்களும் விநாயகர் பெருமாளுக்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது. தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்ய வேண்டும். அதனால் பெண்களுக்கு எந்த வித தடைகளும் ஏற்படாது. பெண்களும் இந்த வழிபாட்டை தாராளமாக செய்யலாம்.
காலை, மதியம், மாலை என்று மூன்று வேளையும் இந்த மந்திரத்தை 27 முறை மனதார உச்சரிக்க வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு விநாயகப் பெருமானுக்கு முன்பாக ஒரு நெய்தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்து மந்திரத்தை கூற வேண்டும். மதியம் நாம் வீட்டில் இருந்தால் மறுபடியும் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறலாம். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் அவர்கள் இருக்கும் இடத்தில் கை கால் முகங்களை மட்டும் கழுவி விட்டு அந்த மந்திரத்தை மனதார கூறிக் கொள்ளலாம்.
– Advertisement –

மாலை 6 மணிக்கு விநாயகருக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து மறுபடியும் இந்த மந்திரத்தை கூற வேண்டும். இப்படி ஐந்து நாட்களுக்கு மூன்று வேளை என்ற வீதம் இந்த மந்திரத்தை கூறுவதால் நமக்கு செல்வங்கள் பெறுவதற்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கான வழிகளையும் விநாயகப் பெருமான் அருள்வாள்.
மந்திரம்
ஓம் விநாயகாய வித்மஹே விக்ன ராஜாய தீமஹி தன்னோ கணநாயக ப்ரசோதயாத்!
இதையும் படிக்கலாமே: கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழு மனதுடன் விநாயகப் பெருமானை நினைத்து யார் தொடர்ந்து ஐந்து நாட்கள் மூன்று வேளையும் உச்சரிக்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும். செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது.

– Advertisement –

Qries
Scroll to Top