சொந்த வீடு கட்ட சொல்ல வேண்டிய மந்திரம்

Qries

– Advertisement –

காக்கை குருவி கூட தனக்காக சொந்தமாக ஒரு இடத்தை தேர்வு செய்த பிறகு தான் தன் முட்டைகளை ஈன்று குஞ்சுகள் பொறிக்கும். ஆனால் மனிதனாகப் பிறந்த நாமோ சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி அதில் வீடு கட்டி நம்முடைய குடும்பத்துடன் குடியேற வேண்டும் என்று நினைத்தால் அது நினைத்த உடனே நடைபெறுவது கிடையாது.
பலருக்கும் இந்த சொந்த வீடு கனவு என்பது எட்டா கனியாகவே இருந்து வருகிறது. ஒரு சிலருக்கு சொந்த வீடு வாங்குவதற்குரிய பொருளாதார வசதி இல்லாத சூழ்நிலையால் அந்த கனவு நிறைவேறாமல் இருக்கும். இன்னும் சிலருக்கோ பொருளாதார வசதி இருந்தும் அந்த கனவை நிறைவேற்ற முடியாமல் ஏதாவது ஒரு தடைகள் வந்து கொண்டே இருக்கும்.
– Advertisement –

இப்படி எப்பேற்பட்ட தடைகளாக இருந்தாலும் பிரச்சினையாக இருந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்து விரைவிலேயே சொந்த வீட்டில் குடியேறும் அமைப்பை உண்டு பண்ணும் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சொந்த வீடு கட்ட செவ்வாய் பகவான் மந்திரம்
பொதுவாக சொந்த வீடு, நிலம், வாசல் வாங்க வேண்டும் என்றால் நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பலமாக இருக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதையும் மீறி அவர் அப்படி தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையில் இருந்தால் மட்டும்தான் நம்மால் சொந்த வீட்டில் குடியேறுவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும்.
– Advertisement –

அப்படிப்பட்டவர்கள் செவ்வாய் பகவானுக்குரிய அதி தெய்வமான முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்று கூறுவோம். அப்படியே முருகப் பெருமானை வழிபடுவதோடு இந்த ஒரு மந்திரத்தையும் தினமும் நாம் எழுதி வர விரைவிலேயே செவ்வாய் பகவானின் அருளை நம்மால் பெற முடியும்.
பொதுவாக செவ்வாய் பகவானை மங்களக்காரகன் என்று கூறுவோம். செவ்வாய்க்கிழமையில் வாங்கும் பொருட்கள் நம்முடன் நிலையாக நிலைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் கடன் தொடர்பான பிரச்சனைகள் தீருவதற்கும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறந்தது.
– Advertisement –

செவ்வாய் பகவானுக்குரிய அதி தெய்வமான முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் நாம் வழிபடும் பொழுது நமக்கு இருக்கும் பல தடைகள் விலகி நன்மைகள் உண்டாகும். எந்த வேண்டுதலை முன்வைத்து நாம் முருகப்பெருமானை வழிபடுகிறோமோ அந்த வேண்டுதல் விரைவிலேயே நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அப்படி சிறப்பு மிகுந்த செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் நாம் இந்த ஒரு மந்திரத்தை 9 முறை எழுதினாலேயே நம்முடைய வாழ்க்கையில் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி எப்பொழுதும் போல் வழிபாடு செய்ய வேண்டும்.
செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய செவ்வாய் ஹோரையை தேர்வு செய்து கொள்ளுங்கள். காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணி, மதியம் 1:00 மணியிலிருந்து 2:00 மணி அல்லது இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணி. இந்த மூன்று நேரங்களில் எந்த நேரம் தங்களுக்கு வசதியான நேரமோ அந்த நேரத்தை தேர்வு செய்து முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து கொள்ள வேண்டும். புதிதாக ஒரு நோட்டு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சிவப்பு நிற பேனாவை பயன்படுத்தி இந்த மந்திரத்தை 9 முறை எழுத வேண்டும்.
“ஓம் அங்காரகாய நமஹ”
இப்படி எழுதி முடித்த பிறகு அந்த நோட்டை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு அந்த பேனா நோட்டை எடுத்து மறுபடியும் அதே மந்திரத்தை 9 முறை எழுத வேண்டும்.
இப்படி தினமும் எழுதி வர செவ்வாய் பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சிகளை செவ்வாய்க்கிழமையில் முருகப் பெருமானை வழிபட்டு விட்டு செய்ய தொடங்கும் பொழுது அந்த காரியம் கண்டிப்பான முறையில் வெற்றியும் தரும்.
இதையும் படிக்கலாமே: பண பிரச்சனை தீர மா இலை வழிபாடு
மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை 9 முறை எழுதி செவ்வாய் பகவானின் அருளை பரிபூரணமாக பெற்று விரைவிலேயே சொந்த வீட்டில் குடியேறும் யோகத்தை பெறுவோம்.

– Advertisement –

Qries
Scroll to Top