– Advertisement –
தொட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் மிக்க தெய்வமாக விநாயகப் பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமான் அவதரித்த தினமாக தான் விநாயக சதுர்த்தி திகழ்கிறது. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாம் விநாயகர் பெருமானே கண்டிப்பான முறையில் வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது சில சூட்சமமான விஷயங்களையும் மந்திரங்களையும் உச்சரித்தோம் என்றால் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகள் நமக்கு உண்டாகும். இந்த மந்திரம் குறித்த பதிவில் விநாயகர் சதுர்த்தி அன்று எந்த மந்திரத்தை கூறி விநாயகபெருமானை வழிபட்டால் தங்கம் அதிக அளவில் சேரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
தங்கம் சேர விநாயகர் மந்திரம்
தங்க நகைகள் அதிகமாக சேர வேண்டும் என்றால் வருமானம் அதிகரிக்க வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த முயற்சிகளில் எந்த வித தடைகளும் இல்லாமல் வெற்றிகரமாக நடக்க வேண்டும். இந்த தடைகளை நீக்கி வெற்றியை தரக்கூடிய தெய்வமாக தான் விநாயகர் திகழ்கிறார். அதனால் நாம் மிகவும் எளிமையான முறையில் விநாயகப் பெருமானை மந்திரம் கூறி வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வருமானம் அதிகரிக்கும். அதன் மூலம் தங்க நகையும் சேரும்.
– Advertisement –
விநாயகர் சதுர்த்தி அன்று பல விதங்களில் பலரும் வழிபாடு செய்வார்கள். பலவிதமான நெய்வேத்தியங்களை வைத்தும் விநாயக பெருமானுக்கு பிடித்தமான நெய்வேத்தியங்கள், பிடித்தமான மலர்கள், பிடித்தமான இலைகள், பிடித்தமான அனைத்தையும் வைத்து விநாயகப் பெருமானை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்யும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. மிகவும் வசதி குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் தங்களால் இயன்ற பிரசாதங்களை செய்து வைத்து விநாயகப் பெருமானை வீட்டிற்கு அழைப்பார்கள். அப்படி விநாயகப் பெருமானை வீட்டிற்கு அழைக்கும் பொழுது விநாயகர் பெருமானுக்குரிய மந்திரங்களை கூறி அழைத்தோம் என்றால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.
அந்த வகையில் நாளைய தினம் விநாயக சதுர்த்தி நாளன்று விடியற்காலையில் அதாவது பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து கொள்ள வேண்டும். பிறகு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரிக்கும் பொழுது விநாயகர் பெருமானை மனதார நினைத்துக் கொண்டு உச்சரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானின் மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் உச்சரிப்பவர்களுக்கு தங்க நகைகள் சேருவதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தங்க நகைகள் சேருவதற்குரிய வருமானமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
– Advertisement –
மந்திரம்
ஓம் லம்போதராய வித்மஹேவக்ரதுண்டாய தீமஹிதந்தோ தந்தி ப்ரசோதயாத்
இதையும் படிக்கலாமே:அற்புதங்களை நிகழ்த்தும் அழகன் முருகன் மந்திரம்
இந்த எளிமையான மந்திரத்தை விநாயகப் பெருமானை நினைத்து விநாயகர் சதுர்த்தி அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூறுபவர்களுக்கு தங்க மழை பொழியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam