
நம்முடைய வாழ்க்கையில் நாம் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுவோம் அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்றே கூறுவோம். ஒரு சில காரியங்களை தொடங்கும் பொழுதே தடங்கல்கள் ஏற்பட்டு அதன் மூலம் அந்த காரியத்தை செய்யாமல் விட்டுவிடுவோம். இன்னும் சில காரியங்களோ, பாதி வேலை செய்த பிறகு தடங்கல்கள் ஏற்பட்டு நின்றுவிடும். இன்னும் சில காரியங்களோ கடைசியில் முடிய போற நிலைக்கு வந்து ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு அந்த காரியம் நடைபெறாமல் நின்றுவிடும். அப்படி தடங்கல்களால் ஒரு காரியம் தடைப்பட்டு நிற்கிறது என்னும் பட்சத்தில் அவற்றை சரி செய்து அந்த காரியத்தில் வெற்றியை பெற வேண்டும் என்றால் நாம் ஆஞ்சநேயரையும் விநாயகப் பெருமானையும் வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் ஆஞ்சநேயரின் எந்த மந்திரத்தை கூறினால் நம்முடைய தடங்கல்கள் அனைத்தும் தவிடு பொடியாகும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.தடங்கல் விலகி வெற்றி உண்டாகஎந்த ஒரு தெய்வத்தையும் நாம் சாதாரணமாக வழிபாடு செய்வதை விட அவர்களுக்குரிய மந்திரங்களையும் அவர்களுக்கு பிடித்தமான வார்த்தைகளையும் கூறுவதன் மூலம் விரைவிலேயே அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற்று விட வேண்டும் அதிலும் முக்கியமாக நேர்மறை ஆற்றல் மிகுந்த வார்த்தைகளை கூறும் பொழுது அதற்கு நேர்மறையான பலன்களை அதிகமாக கிடைக்கும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் பலவிதமான மந்திரங்கள் இருந்தாலும் ஒரு சில மந்திரங்கள் அந்த தெய்வத்தை விரைவிலேயே ஈர்த்துக் கொடுக்கும் என்றும் கூறலாம். அப்படி ஆஞ்சநேயரை கவரக்கூடிய ஒரு எளிமையான மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். – Advertisement -இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் கூறலாம். எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். ஒரு சில மந்திரங்களை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் கூற வேண்டும் அல்லது மாலை நேரத்தில் தான் கூற வேண்டும் என்று கூறுவது உண்டு. அதேப்போல் குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டு தான் கூற வேண்டும் என்றும் சில நிபந்தனைகள் இருக்கும். இந்த மந்திரத்திற்கு அப்படிப்பட்ட நிபந்தனைகள் எதுவும் கிடையாது. மனத்தூய்மையுடன் ஆஞ்சநேயரை நினைத்து இந்த மந்திரத்தை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். நம்மால் எவ்வளவு முறை இந்த மந்திரத்தை கூற முடியுமோ அவ்வளவு முறை நாம் கூறிக்கொண்டே இருக்கும் பொழுது ஆஞ்சநேயர் மனமகிழ்ந்து நம் உடனேயே இருந்து நமக்கு வரக்கூடிய தடங்கல்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்குவார் என்றே கூறலாம்.ஆஞ்சநேயர் என்றதும் நம் நினைவிற்கு வருவது ராமனின் பக்தன் என்பதுதான். எந்த அளவிற்கு ராமபிரானுக்கு ஆஞ்சநேயர் முக்கியத்துவம் கொடுத்தாரோ அதை அதே அளவு தன்னுடைய தாயான அஞ்சனை தேவிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். ஆஞ்சநேயரின் அருளை விரைவில் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் ராமபிரானை வழிபாடு செய்வதைப் போலவே ஆஞ்சநேயரின் அன்னையான அஞ்சனைதேவியையும் நினைத்து வழிபாடு செய்தோம் என்றால் விரைவிலேயே ஆஞ்சநேயரின் அருள் நமக்கு கிடைக்கும். அப்படி இவர்கள் இருவரையும் ஒன்று சேர நாம் கூப்பிடும் பொழுது நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு மந்திரம் தான் இது. – Advertisement – மந்திரம்“அஞ்சனை மைந்தா ராமனின் பக்தா ஆஞ்சநேயா”இதையும் படிக்கலாமே: உடல் ஆரோக்கியமாக இருக்க முருகர் வழிபாடுஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் மன அமைதியுடன் ஆஞ்சநேயரை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை முழுமனதோடு யார் ஒருவர் தொடர்ச்சியாக கூறிக் கொண்டே வருகிறார்களோ அவர்களுக்கு இருக்கக்கூடிய தடங்கல்களையும் தடைகளையும் ஆஞ்சநேயர் விலக்குவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam