தேய்பிறை சஷ்டியில் சொல்ல வேண்டிய மந்திரம்

Qries

– Advertisement –

முருகர் வழிபாட்டிற்கு உகந்த அதி முக்கிய நாளாக கருதப்படுவது சஷ்டி. இந்த சஷ்டி தினத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பொழுது அவருடைய அருளை பரிபூரணமாக பெறலாம். சஷ்டியானது மாதத்தில் இரண்டு முறை வரும் ஒன்று வளர்பிறை சஷ்டி மற்றொன்று தேய்பிறை சஷ்டி. அப்படி அதி முக்கியமான நாளில் முருகனின் அருளை பெற்று வளமுடன் வாழக் கூடிய ஒரு சூட்சம மந்திரத்தை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
சகல சௌபாக்கியத்தையும் தரும் சஷ்டி வழிபாடு
இன்றைய தினம் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் செய்யலாம் இல்லாதவர்கள் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் சொன்னாலும் போதும். முதலில் சஷ்டி தினத்தில் முருகருக்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றி பார்க்கலாம். இந்த வழிபாட்டை மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 9:00 மணிக்குள்ளாக செய்தால் போதும்.
– Advertisement –

இதற்கு முருகர் படத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து விடுங்கள். நல்ல மனம் மிக்க பூக்களை சாற்றுங்கள். வேல் சிலை இருந்தால் அதற்கு அபிஷேகம், வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. அத்துடன் முருகருக்கு பிடித்த எளிமையான நெய்வேத்தியங்களை ஏதாவது ஒன்று செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது முருகர் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.
இந்த தீபம் கிழக்கு முகமாக எரியட்டும். நீங்கள் வடக்கு முகமாக அமர்ந்து ஓம் சரவண பவ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிரசாதங்களை வீட்டில் உள்ளவர்கள் பகிர்ந்து உண்ணுங்கள். சஷ்டி தினத்தில் செய்யப்படும் இந்த வழிபாடு முருகனின் பரிபூரண அருளை உங்களுக்கு பெற்று தரும்.
– Advertisement –

இந்த வழிபாடு செய்ய நேரமில்லை, வாய்ப்பு இல்லாதவர்கள் என்பவர்கள் இந்த ஒரு மந்திரத்தை இன்று இரவுக்குள் 108 முறை எழுத வேண்டும். இதை எழுதும் நேரம் ராகுகாலம், எமகண்டம் போன்றவை இல்லாதிருக்க வேண்டும் . அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் மற்றபடி உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இன்றைய நாள் முடிவதற்குள்ளாக 108 முறை எழுத வேண்டும்.
ஓம் சிக்கல் மேவிய சிங்கார போற்றி
என்ற இந்த மந்திரத்தை தான் நீங்கள் 108 முறை எழுத வேண்டும். முருகரின் அதிசக்தி வாய்ந்த மந்திரங்களில் இதுவும் ஒன்றாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி இது முருகரின் பரிபூரண அருளை பெறுவதற்கான சூட்சம மந்திர முறையாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட முருகர் கோவில் பரிகாரம்
இன்றைய தேய்பிறை சஷ்டி திதியில் இந்த மந்திர வழிபாட்டை செய்பவர்கள் வாழ்க்கையில் சகல செல்வங்களும் பெருகி நிம்மதியுடன் வாழக் கூடிய யோகத்தை முருகப்பெருமான் அருள்வார் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் இன்றைய தினம் இந்த வழிபாட்டை செய்து முருகனின் பரிபூரண அருளை பெறுங்கள்.

– Advertisement –

Qries
Scroll to Top