நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் | Nadakkathathai nadathikattum narasimmar manthiram

Qries

– Advertisement –

நமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நன்மைகளை தருவதற்கும் இன்பமான ஒரு வாழ்க்கையை அருளுவதற்கும் தான் தெய்வங்கள் நமக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களுள் மிகவும் சிறப்பு மிகுந்த தெய்வமாக திக்பவர் தான் நரசிம்மர். பக்தனின் கூப்பிட்ட குரலுக்கு ஏற்றவாறு ஓடி வந்து பக்தனை காப்பாற்றிய தெய்வம் ஆக நரசிம்மர் திகழ்கிறார். அப்படிப்பட்ட நரசிம்மரை எந்த மந்திரம் கூறி வழிபட்டால் நடக்காத காரியமும் நடக்கும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
அசுரனின் மகனாக இருந்தாலும் தன்னை நம்பி, விடாப்பிடியோடு தன்னையே நினைத்துக் கொண்டு, தன்னுடைய நாமத்தையே உச்சரித்தான் என்ற ஒரே காரணத்தினால் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து அவனைக் காப்பாற்றி அவனுக்கு நல்ல வாழ்வை தந்தவர் தான் நரசிம்மர். நரசிம்மர் உருவான கதையும் அவரின் பக்தனான பிரகலநாதனின் கதையும் பலரும் அறிந்ததே. அப்படிப்பட்ட நரசிம்மரை நாம் வழிபடும் பொழுது நமக்கு பல நன்மைகள் ஏற்படும்.
– Advertisement –

நரசிம்மரை நாம் வழிபடுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் தீரும். எதிரிகள் தொல்லை ஒழியும். தீய சக்திகள் அனைத்தும் விலகும். இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட நரசிம்மரின் எந்த மந்திரத்தை கூறினால் நடக்காத காரியமும் நடக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
நீண்ட நாட்களாக ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வந்திருப்போம். ஆனால் அந்த காரியம் நடைபெறாமல் ஏதாவது ஒரு தடைகள் வந்து அது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். என்னதான் முயற்சி செய்தாலும் நம்மால் அந்த காரியத்தை செய்ய முடியாத அளவிற்கு ஏதோ தடைகள் இடஞ்சல்கள் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் பலரும் மனம் உடைந்து மேற்கொண்டு முயற்சிகள் எதையும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். அப்படி மன விரக்தி ஏற்பட்டவர்களும் நரசிம்மரின் இந்த மந்திரத்தை கூறி வர அவர்களின் மனவருத்தம் நீங்கி அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
– Advertisement –

மந்திரம்
யஸ்ப அபவத் பக்தஜன ஆத்திஹந்துபித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
சமஸ்கிருதத்தில் இருக்கும் இந்த ஸ்லோகத்தை சொல்ல இயலாதவர்கள் இந்த ஸ்லோகத்திற்குரிய பொருளையும் சொல்லலாம்.
– Advertisement –

பொருள்
பக்தி அற்றவர்களால் அடைய முடியாதவனே, தாயின் கருப்பையில் அவதரித்தால் தாமதமாகும் என்று தூணில் அவதரித்தவனே, நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தை போக்குபவனே, லட்சுமி நரசிம்மனே, உனது திருவடியை சரணடைந்தேன்.
இந்த மந்திரத்தை முழு மனதோடு நரசிம்மரை நினைத்து நரசிம்மருக்கு பாணகத்தை நெய்வேத்தியமாக வைத்து நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் லட்சுமி நரசிம்மரின் படம் இல்லாத பட்சத்தில் அருகில் இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று நெய் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறினால் போதும். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறிய பிறகு தங்களால் இயன்ற பிரசாதத்தை நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தர வேண்டும்.
இதையும் படிக்கலாமே: பணப் பிரச்சனை தீர மந்திரம்
நரசிம்மரின் இந்த அற்புதமான மந்திரத்தை தினமும் உச்சரித்து நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்கி வெற்றிகளை பெறுவோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.inhttps://www.youtube.com/@nithyasubam

Scroll to Top