– Advertisement –
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கக்கூடிய தெய்வமெனில் அது கந்த பெருமாள் தான். முருகா என்று சொன்னாலே உருகிவிடும் அளவிற்கு இன்று பக்த கோடிகள் பெருகி உள்ளார்கள் எனில் அதற்கு கந்தனின் கருணை தான் காரணம் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. அப்படியான கந்தன் தன்னுடனே எப்பொழுதும் இருக்க வேண்டும் அவருடைய அருள் எப்போதும் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள் இருப்பார்களா என்ன?.
இந்த ரகசியத்தை நீங்களும் தெரிந்துகொண்டால் கந்தன் எப்பொழுதும் உங்களுடனே இருப்பார் என் பதில் துணியும் சந்தேகமே இல்லை. அப்படி அவர் தன்னுடனே இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
– Advertisement –
முருகன் அருள் கிடைக்க மந்திரம்
முருகனின் அருள் கிடைக்க பல வழிபாட்டு முறைகள் நம்மில் உள்ளது கிருத்திகையில் விரதம் இருந்து வழிபடுவது சஷ்டி திதியில் விரதம் இருப்பது செவ்வாய் தோறும் விரதம் இருப்பது என பல்வேறு விதமான விரதங்களும் பூஜை முறைகளும் வழிபாடுகளும் உள்ளது. அப்படி வழிபாடு செய்யும் பொழுது நாம் ஒரு மந்திர வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
நாம் சொல்லக் கூடிய மந்திரமானது முருகனின் அருளை நமக்கு பரிபூரணமாக பெற்று தரும் என்றும் சொல்லப்படுகிறது. அது என்ன மந்திர வார்த்தை என்றால் ஹர ஹர என்பது தான். என்ன இந்த ஒரு மந்திர வார்த்தையை சொன்னால் முருகன் அருள் கிடைக்குமா? என்று கேள்வி எழலாம். முருகரை வழிபடும் பொழுதும் ஆலயத்தில் முருகரை தரிசனத்தை காணும் பொழுதும் பலரும் ஹரஹரா என்னும் வார்த்தையை மனதார பக்தி பரவசத்துடன் சொல்வதை நாம் பார்த்திருப்போம்.
– Advertisement –
இந்த வார்த்தையை நம் வீட்டு பெரியவர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள். அதே போல் பெருமாளை வணங்கும் பொழுது கோவிந்தா என்ற வார்த்தையும் சொல்வார்கள். ஒரு சில தெய்வங்களை வணங்கும் பொழுது அவர்களுக்கான சில மந்திர வார்த்தைகள் உண்டு சிவபெருமானுக்கு சிவ சிவ என்ற வார்த்தை போல தான். இந்த வார்த்தைகள் பிரபஞ்சத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. இதை நாம் அடிக்கடி சொல்லும் பொழுது பிரபஞ்சத்துடன் நமக்கான தொடர்பு அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் அந்த தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: ஆடி 1ஆம் தேதி செய்ய வேண்டிய பரிகாரம்
இப்படியாகும் பட்சத்தில் நாம் நினைப்பது நாம் வேண்டுவதும் நமக்கு உடனே நிறைவேறும் ஆற்றல் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆகையால் முருகனை வழிபாடு செய்பவர்கள் இந்த வார்த்தையை அடிக்கடி உச்சரித்து கொண்டே இருந்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையில் நம்பிக்கை உள்ளவர்கள் உச்சரித்துப் பாருங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam