பணப் பிரச்சனை தீர மந்திரம் | Pana Pirachanai Theera Manthiram in Tamil

Qries

– Advertisement –

ஒருவர் வாழ்க்கையில் எத்தனை பாடுபட்டாலும் அவர்களுக்கு நிலையான ஒரு வருமானம் இருக்காது அதே நேரத்தில் செய்த வேலைக்கான வருமானம் கூட அந்த நேரத்தில் கிடைக்காது வர வேண்டிய இடத்தில் இருந்து சரியான நேரத்திற்கு பணம் வராமல் போவது இப்படி பணம் தொடர்பாக எந்த முயற்சி எடுத்தாலும் அது நடக்காமல் இருப்பது. மற்றொன்று நமக்கு பண பற்றாக்குறை ஏற்படுத்தும் நல்ல வேலை இல்லாமல் இருப்பது இதன் மூலம் கடன் வாங்குவது.
இப்படி முன்னேற்றம் இல்லாமல் அப்படியே தங்குவது இவையெல்லாம் பணப் பிரச்சனை. இவை இரண்டுமே நாம் உழைக்க தயாராக இருப்போம் உழைத்துக் கொண்டே இருப்போம். ஆனால் ஒன்று நமக்கு வர வேண்டிய பணம் வராமல் தடைப்பட்டு இருக்கும் மற்றொன்று பண வருமானமே நம்மிடம் இருக்காது. இதனால் செலவுகளும் கடன்களும் அதிகரிக்கும் இப்படியான பிரச்சனைகள் தீர நாம் செய்யக் கூடிய ஒரு எளிமையான மந்திரத்தை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
– Advertisement –

பணத்தடை நீங்க மந்திரம்
இந்த மந்திரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்ல துவங்கலாம். ஆனால் சொல்லுவதற்கு என்று சில வழிமுறைகள் உண்டு. அதே போல் உங்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது இதை தினமும் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த பணத்தடை பண பிரச்சனைகள் போன்றவை ஏற்பட நம்முடைய உடம்பில் உள்ள ஆரா சக்தி குறைவதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
நம்மிடம் பணம் ஈர்ப்பு தன்மை குறையும் போதும் இந்த பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள நேரிடும். அதை சரி செய்வதற்கான ஒரு எளிய மந்திர முறை தான் இது. அது எப்படி என்று பார்க்கலாம். இதற்கு ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை எடுத்துக் கொள்ளவும், அதை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை நீங்கள் குடிக்கும் தண்ணீரில் ஊற்றி குளிக்க வேண்டும். இப்படி குளிக்கும் போது இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
– Advertisement –

ஓம் தன பிரதாய நமஹ
என்ற இந்த மந்திரத்தை குறைந்தது 11 முறை சொல்லுங்கள். அதிகபட்சம் உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள். இது நம்முடைய பணத்தடைகளை நீக்கி பணவரவை அதிகரித்து கொடுக்கக் கூடிய அற்புதமான மந்திரம். அதே போல் துளசி இலையை நீங்கள் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளிக்கும் போது உங்களுடைய ஆரா சக்தி அதிகரித்து உடம்பில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
பணவரவை அதிகரிக்க பணத்தடையை நீக்க இந்த மந்திரமும் குளியல் முறையும் போதுமா? என்றால் நிச்சயமாக கிடையாது. இது உங்களுடைய தடைகளை தகர்த்தெறியும். அதாவது இது வரை நீங்கள் எத்தனை முயற்சி செய்தும் வராத பணம் இனி நீங்கள் முயற்சி செய்தால் உடனே வரும். அடுத்தடுத்து நீங்கள் புதிய முயற்சிகள் செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் கரைய பரிகாரம்
அதுமட்டுமின்றி சிந்தையும் செயலும் நேர்மறையாய் சிந்தித்து உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு இந்த பரிகார முறை கொண்டு செல்லும் என்று சொல்லப்படுகிறது. இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

– Advertisement –

Qries
Scroll to Top