பணவரவை அதிகரிக்க மகாலட்சுமி மந்திரம் | Pana Varavai Athikarikka manthiram in Tamil

Qries

– Advertisement –

மனிதனாய் பிறந்து ஒவ்வொருவருக்கும் பலவிதமான ஆசைகள் இருந்தாலும் அநேகமானோருக்கு இருக்கும் ஒரே ஆசை அதிகமாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் நல்ல முறையில் வசதியாக வாழ வேண்டும் என்பது தான். இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தான் அனுதினமும் ஓடிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருந்தும் பலரால் தங்களுடைய செல்வ நிலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவதில்லை.
இது போன்ற சமயங்களில் தான் நாம் வழிபாடுகள், பரிகாரங்கள் பூஜைகள் என பலவற்றை செய்கிறோம். நம்மிடம் பணம் தங்குவதற்கான தன்மையும் பணம் சேர்வதற்கான யோகத்தையும் பெற வேண்டி தான் இத்தனை காரியங்களும் செய்கிறோம். இதையெல்லாம் செய்வதோடு சேர்த்து இந்த ஒரு மந்திர வழிபாடு போதும். நம்முடைய செல்வ நிலை உயரும் என்று சொல்லப்படுகிறது.
– Advertisement –

அது என்ன மந்திரம் எந்த நாள் எப்போது சொல்ல வேண்டும். எப்படி அதை சொல்ல வேண்டும் என்பது பற்றிய தகவல்களை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பண வரவை அதிகப்படுத்த மகாலட்சுமி தாயாரின் மந்திரம்
பண வரவு அதிகரிக்க வேண்டும் செல்வ நிலை உயர வேண்டும் என்றால் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருட்கடாட்சம் கட்டாயமாக தேவை பணவரவு என்றாலே அவர்கள் தானே அத்தகைய தாயாரை நாம் அனுதினமும் மனதார வேண்டி வழிபட வேண்டும்.
– Advertisement –

வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு உகந்த முறையில் நாம் பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும். இவற்றோடு சேர்த்து இந்த ஒரு மந்திரத்தையும் சொல்லும் போது பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இப்போது மந்திரம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த மந்திர வழிபாட்டை நாம் புதன்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். புதன்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையிலே செய்து முடிக்க வேண்டும். இதற்கு புதன்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு தரையில் ஒரு மஞ்சள் நிற துணியில் விரித்து நீங்கள் அதில் அமர்ந்து கொள்ளுங்கள்.
– Advertisement –

அடுத்ததாக ஒரு மரப்பலகை அல்லது மரப்பெட்டி இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் மகாலட்சுமி தாயார் படம் அல்லது சிலை இருந்தால் அதை வைத்து விடுங்கள். இந்த மந்திரத்தை சொல்லும் போது தாயாருக்கு இரண்டு மல்லிகை மலரை ஒவ்வொன்றாக போட வேண்டும்.

ஓம் தரித்ராய விநாஷினி அஷ்டலக்ஷ்மிகனகவதி சித்தி தேஹி நமஹ
இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை மந்திரத்தை சொல்லும் போது ஒரு மல்லிகை மலரை தாயாருக்கு அர்ச்சனை செய்யுங்கள். இப்படி அர்ச்சனை செய்து முடித்த பிறகு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். மல்லிகை மலர் கிடைக்காத பட்சத்தில் வேறு மலர்கள் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் தவறு இல்லை.
புதன்கிழமை துவங்கிய இந்த பூஜை வியாழன்,வெள்ளி எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய வேண்டும். தாயாரின் மந்திரத்தை சொல்லி பூஜை செய்யும் இந்த மூன்று நாட்களும் அசைவத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள். தாயாருக்கு அர்ச்சனை செய்த இந்த பூக்களை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.
இதே போல் அடுத்த மாதம் மூன்று நாட்கள் மட்டும் இதை செய்யுங்கள். முதல் மாதம் மூன்று நாட்கள் இந்த பூஜை செய்த உடனே உங்களுக்கு பணவரவில் நல்ல மாற்றமும் புதிதாக பணம் வரக்கூடிய யோகங்களும் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. பணத்திற்கே அதிபதி தேவதையான இந்த தாயாரை இப்படி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய செல்வ நிலையை அதிகரித்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: பணப் பிரச்சனை தீர துர்க்கை அம்மன் வழிபாடு
உங்கள் பொருளாதார நிலை உயரவும், பணவரவில் தடை இல்லாமல் இருக்கவும் நீங்கள் செய்யும் முயற்சியுடன் சேர்த்து இந்த ஒரு வழிபாட்டையும் செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலனை பெறலாம். நம்பிக்கையுடன் இந்த வழிபாடு செய்தால் பலனை பெறலாம்.

– Advertisement –

Qries
Scroll to Top