– Advertisement –
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தினம் தினம் போராடுவதும் துன்பப்படுவதும் நம்முடைய இலக்கை அடைய வேண்டும் என்று தான். இந்த இலக்கு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுவது, சொந்தத் தொழில் தொடங்குவது இப்படி அவரவருக்கு ஏற்ற வகையில் இந்த இலக்கு மாறுபடும்.
எப்படி இருப்பினும் எல்லோரும் ஏதோ ஒரு காரியத்திற்காகவும் அதை நிறைவேற்றுவதற்காகவும் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய உழைப்பையும் முயற்சியும் சேர்த்து இந்த மந்திரத்தை ஜெபித்தால் நிச்சயம் அதற்கான பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
– Advertisement –
வாழ்க்கையில் வெற்றி பெற மந்திரம்
மாதங்களில் பல மாதங்கள் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அதில் பல விசேஷங்கள் வழிபாடுகள் போன்றவை வரும். அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நாம் அன்னையை நினைத்து சொல்லக் கூடிய ஒரு மந்திரம் நம் வாழ்க்கையை மாற்றி விடும் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த மந்திரம் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த மந்திர வழிபாட்டை நீங்கள் இந்த மாதத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் துவங்கலாம். இந்த மந்திரத்தை துவங்கும் முதல் நாள் மட்டும் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேலையில் குளித்து விட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி விட்டு தீபத்தின் முன் அமர்ந்து சொல்லுங்கள். அதன் பிறகு நீங்கள் நேரம் கிடைக்கும் போது இதை சொல்லலாம்.
– Advertisement –
ஓம் நமோ மீனாட்சி அம்மனே போற்றி என்ற மந்திரத்தை இந்த ஏப்ரல் மாதம் முடிவதற்குள்ளாக 3333 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தில் நீங்கள் முதல் நாள் மட்டும் பூஜை அறையில் சொல்லி தொடங்கினால் போதும் மற்ற நாட்களில் எல்லாம் நீங்கள் இங்கு ஓய்வாக இருக்கும் நேரத்தில் சொல்லலாம். ஆனால் வண்டி வாகனத்தில் பயணம் செய்யும் போது இதை சொல்லாதீர்கள்.
அதே போல் பெண்கள் மாதவிலக்கான சமயத்தில் இந்த மந்திரத்தை சொல்லக் கூடாது. இந்த மந்திரத்தை அசைவம் சாப்பிடும் நாட்களில் சொல்ல வேண்டாம். அப்படி அசைவம் அன்றைய தினம் சாப்பிடுவதாக இருந்தால் காலையிலே இந்த மந்திரத்தை சொல்லி முடித்து விடுங்கள். அதன் பிறகு அன்றைய தினத்தில் நீங்கள் அசைவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடி எந்த வித கட்டுப்பாடும் இந்த வழிபாட்டிற்கு கிடையாது.
இதையும் படிக்கலாமே: நல்ல வேலை, உயர் பதவி கிடைக்க முருகர் வழிபாடு
உலகையே காத்து ரட்சிக்கும் ஈசனின் இணையான அன்னை மீனாட்சி தாயாரை நினைத்து சொல்லப்படும் இந்த மந்திரமானது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நல்ல முறையில் காத்து நல்ல பல காரியங்களை நடத்திக் கொடுப்பார் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
– Advertisement –