– Advertisement –
ஒருவர் ஒரு காரியத்தை செய்ய முயற்சி செய்யும் பொழுது அந்த காரியத்தில் வெற்றி என்பது ஏற்பட வேண்டும் என்ற முழு நோக்கில் தான் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்பார்கள். அதில் ஏதாவது தடைகள் ஏற்பட்டாலோ அல்லது தோல்வியை கண்டாலோ துவண்டு விடாமல் திரும்பவும் முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள். அந்த முயற்சியை கைவிடாமல் முருகப் பெருமானின் இந்த ஒரு வரி மந்திரத்தை கூறும் பொழுது அவர்களுக்கு அந்த காரியத்தில் வெற்றி உண்டாகும். அந்த ஒரு வரி மந்திரம் என்ன என்பதை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காரிய வெற்றி ஏற்படவும், முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகவும், நினைத்தது நடைபெறவும், வேண்டுதல்கள் நிறைவேறவும் பல தெய்வங்களை நாம் வழிபாடு செய்வோம். பல தெய்வங்களுக்கு உரிய மந்திரத்தை நாம் உச்சரிப்போம். அப்படி உச்சரிக்க கூடிய ஒரு மந்திரமாக திகழ்வதுதான் முருகப்பெருமானின் இந்த ஒரு வரி மந்திரம். இந்த மந்திரமானது சிவபெருமானால் முருகப்பெருமானுக்கு கூறப்பட்டது என்று கூறப்படுகிறது. அவ்வளவு சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் ஆறு முறை நாம் உச்சரிக்க வேண்டும்.
– Advertisement –
அதிலும் குறிப்பாக முருகப்பெருமானுக்குரிய செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு முன்பாக ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்து 108 முறை இந்த மந்திரத்தை நாம் கூறும்பொழுது அதற்குரிய பலன் விரைவிலேயே கிடைக்கும். இந்த மந்திரத்தை பூஜை அறையில் அமர்ந்து கூற வேண்டும் என்ற எந்தவித நிபந்தனையும் கிடையாது. நம்மால் வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூற இயலாத சூழ்நிலையில் இருந்தாலும் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தில் இருந்து கொண்டே இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்கலாம்.
ஏதாவது ஒரு காரியத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டது அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நினைக்கும் பொழுது உடனே இந்த மந்திரத்தை ஆறு முறை கூறினால் அந்த இடத்தில் முருகப்பெருமானால் நமக்கு நன்மைகள் உண்டாகும். நமக்கு ஆபத்துகள் ஏற்படும் நேரத்தில் இந்த மந்திரத்தை நாம் கூறும்பொழுது அந்த ஆபத்துகள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
– Advertisement –
இதோடு மட்டுமல்லாமல் நமக்கு ஏதாவது ஒரு வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்னும் பட்சத்தில் இந்த மந்திரத்தை தினமும் ஆறு முறை கூறி வர அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும். சங்கல்பம் செய்தும் இந்த மந்திரத்தை நாம் கூறலாம். தொடர்ந்து 48 நாட்கள் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பதும் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றும்.
முருகப்பெருமானின் அற்புதமான ஒரு வரி மந்திரம்
“ஓம் நமோ குமாராய நம”
இதையும் படிக்கலாமே எந்தத் தீங்கும் உங்களை நெருங்காது இருக்க மந்திரம்
மிகவும் எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை முழுமனதோடு முருகப் பெருமானை நினைத்து தினமும் ஆறு முறை கூறுபவர்களுக்கு அவர்கள் நினைத்தது நடக்கும். வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam