
– Advertisement –
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த நாளே. நம்முடைய இஷ்ட தெய்வத்திற்கும் குலதெய்வத்திற்கும் அனுதினமும் உகந்த நாளாகவே நாம் கருத வேண்டும். அந்த வகையில் சிவபெருமானுக்கு உகந்த நாளாக திகழ்வதுதான் பிரதோஷம் வரக்கூடிய நாள். இந்த பிரதோஷ நாளில் கண்டிப்பான முறையில் சிவபெருமானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படி கஷ்டங்களும் துன்பங்களும் நீங்குவதற்கு சிவபெருமானை சாதாரணமாக வழிபாடு செய்வதோடு சிவபெருமானின் இந்த ஒரு மந்திரத்தையும் கூறி நாம் வழிபாடு செய்ய விரைவிலேயே நம்முடைய துன்பங்கள் தீரும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
துன்பங்கள் விலக மந்திரம்
சிவபெருமானை மனதார நினைத்து பிரதோஷ நாளன்று பலரும் காலையிலிருந்து மாலை வரை விரதம் இருந்து அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானிற்கு நடக்கக்கூடிய பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுடைய வீட்டிலேயே இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு பிரதோஷ வேளையில் அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்வார்கள். அதிலும் சிவபெருமானுக்குரிய மந்திரங்களை கூறி வழிபாடு செய்வது என்பது அதீத பலனை தரும். எப்படி செய்வதாக இருந்தாலும் முழு மனதோடு செய்ய வேண்டும் என்பதே குறிப்பிடத்தக்கது.
– Advertisement –
அப்படி நாம் செய்யக்கூடிய மந்திர வழிபாடு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. சிவபெருமானுக்குரிய பஞ்சாட்சர மந்திரத்தையே ஒவ்வொரு முறையில் நாம் உச்சரித்தோம் என்றால் நமக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் தேய்பிறை பிரதோஷ நாளன்று பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை நாம் கூறும்பொழுது சிவபெருமானின் அருளால் நம்முடைய கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை பிரதோஷ நேரத்தில் நம்மால் இந்த மந்திரத்தை கூற இயலவில்லை என்னும் பட்சத்தில் நமக்கு நேரம் கிடைக்கும் பொழுது பிரதோஷ நாளில் இந்த மந்திரத்தை கூறலாம்.
இந்த மந்திரத்தை வீட்டு பூஜை அறையிலோ அல்லது சிவபெருமானின் ஆலயத்திலோ அமர்ந்து கொண்டு கூற வேண்டும். வீட்டு பூஜை அறையில் கூறும் பொழுது சிவபெருமானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை 11, 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் உச்சரிக்க வேண்டும். அவர் அவர்களின் நேரத்தை பொறுத்து இந்த மந்திரத்தின் எண்ணிக்கையை நாம் அதிகரித்துக் கொண்டே செல்லலாம்.
– Advertisement –
இந்த மந்திரத்தை வீட்டில் கூறுவதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக முறையில் சிவபெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதேபோல் வெறும் தரையில் அமர்ந்து கொண்டு சொல்லாமல் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து கொண்டு சொல்ல வேண்டும். ஆலயத்தில் சொல்வதாக இருந்தால் இந்த நிபந்தனைகள் எதுவும் தேவையில்லை. சிவபெருமானுக்காக தீபத்தை மட்டும் ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூறலாம். ஆலயத்தில் இந்த மந்திரத்தை சண்டிகேஸ்வரருக்கு அருகிலோ அல்லது நந்திகேஸ்வரருக்கு அருகிலோ அமர்ந்து கொண்டு சொல்ல விரைவிலேயே பலன் கிடைக்கும்.
மந்திரம்
– Advertisement –
ஓம் சிவ சிவ சிவ சிவாய நமஹ
இதையும் படிக்கலாமே:மகா சிவராத்திரி நான்கு கால பூஜை மந்திரம்
மிகவும் எளிமையான இந்த சிவபெருமானின் மந்திரத்தை முழு மனதோடு சிவபெருமானை நினைத்து சிவபெருமானுக்குரிய தேய்பிறை பிரதோஷ நாளில் கூறுபவர்களுக்கு சிவபெருமானின் அருளால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்களும் துயரங்களும் கஷ்டங்களும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam