ஓதிமலைமுருகன் கோவில் | ஓதிமலை முருகன் கோவில்

Qries


ஓதிமலை முருகன் கோவில் சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை (ஓதிமலை முருகன் கோவில்), இங்கு பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது .ஒதிமலையில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்ளிட்ட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகள், மலையேற சற்று சிரமமாகத்தான் இருக்கும்.. கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும். 🌼 புஞ்சைப்புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்.. 🌼சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது. 🌼பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் முதலில் முருகபெருமானை தரிசித்தார் தான் தான் பெருமானின் அனுகிரகத்தால் அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் பழனிக்கு சென்றதாக சென்றதாக. தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது.. இது பூதிக்காடு என்று அறியப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம் இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன. 🍁 பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகள், பல வண்ண பறவைகள் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுகிறது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே உள்ளது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் .. ஓதிமலை குறித்த புராணச் செய்தி : 🍁படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, ​​விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. 🍁 படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தன. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகைப் படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”எனப்பட்டது. 🍁முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணியஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார். ஓதி மலை அமைவிடம் : சத்தியமங்கலத்தில் இருந்து புளியம்பட்டி வரவேண்டும்.புளியம்பட்டி-ல இருந்து 1௦ கீமீ தான்…ஆனா புளியம்பட்டி-ல இருந்து ஒதிமலை போக பஸ் வசதி குறைவு.. 🔴1. ஈரோட்டிலிருந்து – ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும் .. 🔴2. கோவையிலிருந்து -கோவை > அன்னூர் > ஓதிமலை வரவேண்டும் . 🔴3. மதுரையில் இருந்து மதுரை – பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி > புளியம்பட்டி > ஓதி மலை வரவேண்டும்.. ஒருமுறை சென்று வாருங்கள் சித்தர்களின் அருளும் , முருகபெருமானின் பரிபூரண கடாட்சியும், அருமையான அனுபவங்களையும் பெறுவீர்கள்….’ கந்தர் அலங்காரம் பாடல் வரிகள் வேல் மாறல் பாடல் வரிகள் முதல் தரு பத்தி பாடல் வரிகள் கந்த சஷ்டி கவசம் கந்த சஷ்டி வரிகள் பாடல் வரிகள் கந்த குரு கவசம் பாடல் வரிகள்

Qries

Scroll to Top