Srirangam temple timings history | ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

Qries

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் (Srirangam temple all information about history, timings, routemap and specialties about ramanujar, temple festivals, address and location)

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் வரலாறு மற்றும் சிறப்பினை அறிந்து கொள்ளலாம்.
Srirangam temple god and godess ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெய்வங்கள்
அருள்மிகு ஶ்ரீரங்கம் கோயில் சன்னதிகள்

மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப – சன்னதிகளும் உள்ளன.
கோயிலில் உள்ள இதர சன்னதிகள்:

தாயார் சன்னதி
சக்கரத்தாழ்வார் சன்னதி
உடையவர் (இராமனுஜர் சன்னதி)
கருடாழ்வார் சன்னதி
தன்வந்திரி சன்னதி
ஹயக்கிரீவர் சன்னதி

Srirangam temple history ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வரலாறு

புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் என்று சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் 30 நாட்களும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வ செழிப்பு உள்பட அனைத்து பலன்களும் ஒருங்கே கிடைக்கும் என்பது ஐதீகம்.
குறிப்பாக சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் புதன் வீடாகிய கன்னி ராசியில் சூரிய பகவான் அமர்கிறார். புதன் கிரகமானது பெருமாளை குறிக்கும். இந்த கால கட்டத்தில் உடல் வெப்பநிலை பொதுவாக அதிகரிக்கும். அதை சமப்படுத்தவே நமது முன்னோர்கள் துளசி தீர்த்தத்தை பயன்படுத்தினார்கள்.
அசைவத்தையும் தவிர்த்தார்கள். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றிணைந்து பயன் தரும். புரட்டாசியில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது நமது மனதையும், உடலையும் மேம்படுத்தும். இதை கருத்தில் கொண்டு உங்களுக்கு மாலைமலர் தினமும் ஒரு திவ்யதேசத்தை அறிமுகம் செய்கிறது.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவான ஸ்ரீரங்கத்தில் அமையப்பெற்றுள்ள ஏழு சுற்று மதில்களுக்குள் 158 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சிறிய தீவு நகரமாக திகழ்கிறது ரெங்கநாதர் கோவில்.
இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. ஸ்ரீரங்கம் கோவில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதா கும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.
ராமர் இந்த விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷ ணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந் தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்து விட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியாததால் கலங்கினான்.

அங்கு ஆண்டுவந்த தர்ம வர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளி கொண்ட ருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோவில் எழுப்பி வழிபாடு செய்தான்.
தர்மவர்ம சோழன் கட்டிய ஸ்ரீரங்கம் கோவில் காவிரியின் வெள்ளப்பெருக் கினால் மண்ணில் புதை யுண்டு மறைந்தது. பின்னர் கிளிச்சோழன் ஒரு கிளியின் உதவியுடன் மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தான். “வைகுந்தத்திலுள்ள விஷ் ணுவின் கோவில் இருந்த இடம் இதுதான். அக்கோவிலை இப்போதும் இங்கு காணலாம் என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்ப கனவில் சொல்லிக் கொண்டிருந்தது. அதன்படி விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோவில் எழுப்பினான். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
Srirangam temple architecture and gopuram ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கட்டமைப்பு:

ஶ்ரீரங்கம் திருக்கோயிலானது, இந்தியாவின் தென் முனையை நோக்கியவாறு 10 டிகிரி 52’ வடக்கிலும் மற்றும் 78 டிகிரி 42’ கிழக்கிலும் காவிரிநதியின் இரு கிளைகளால் உருவாக்கப்பட்ட ஒரு தீவில் அமைந்திருக்கிறது. இக்கோயில் ஏறக்குறைய 6,31,000 சதுரமீட்டர் (156 ஏக்கர்) கொண்ட ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியிருக்கிறது. இந்தக் கோயிலில் மூலஸ்தானத்தைச் (கருவறை, கர்ப்பகிரகம்) சுற்றி ஏழு அடர்ந்த செவ்வகப் பிரகாரங்கள் உள்ளன. ஏழு பிரகாரங்கள் கொண்ட இந்தியாவில் உள்ள ஒரேவொரு கோயில் ஶ்ரீரங்கக் கோயில் மட்டுமே ஆகும். இன்றைய வைணவர்களுக்கு ஒரு புனித அடையாள எண்ணான ஏழு, யோகாவின் ஏழு மையங்களைக் குறிப்பதாக அல்லது மத்தியில் உயிர் (ஆத்மா) குடியிருக்கக்கூடிய மனித உடலின் ஏழு கூறுகளைக் குறிப்பதாக இருக்கிறது.
Srirangam temple ramanujar story ஸ்ரீரங்கம் ராமானுஜர் சன்னதி மகிமை:
பிற்கால தலைமுறையினர் ராமானுஜர் பற்றி அறிந்துகொள்வதற்காக, அவரது காலத்திலேயே அவரைப்போல இரண்டு விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன.காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 1017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் பிறந்தார். ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி, மேல்கோட்டை, திருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து ஆன்மிகப் பணிகள், சமய சீர்திருத்தம், வைணவத்தை வளர்க்க ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தம், கோவில் வழிபாட்டு கோட்பாடுகள் மற்றும் அவற்றின் பூஜை முறைகள் ஆகியவற்றை வகுத்து தந்தவர் இவர்.

பிற்கால தலைமுறையினர் ராமானுஜர் பற்றி அறிந்துகொள்வதற்காக, அவரது காலத்திலேயே அவரைப்போல இரண்டு விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றை, ராமானுஜர் தழுவி தன்னிடம் இருந்த ஆத்ம சக்தியை அதில் பிரதிஷ்டை செய்தார். திருநாராயணபுரத்தில் உள்ள அந்த விக்கிரகம் ‘தமர் உகந்த திருமேனி’, அதாவது ‘அடியார்களுக்கு மிகவும் பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று மற்றொரு விக்கிரகம் ஸ்ரீபெரும்புதூரில் தயார் செய்யப்பட்டது. அது ‘தான் உகந்த திருமேனி’, அதாவது ‘ராமானுஜருக்கு பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த சிலை கண் திறப்பின்போது, ராமானுஜரின் சக்தி அதற்குள் செலுத்தப்பட்டதாக ஐதீகம்.
திருநாராயணபுரத்தில் உள்ள தமர் உகந்த திருமேனி ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து, முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன இரண்டையும் விட இதுவே முக்கியமானதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் கிட்டத்தட்ட 800 வருடங்களுக்கும் மேலாக அருள்பாலித்து வரும் ராமானுஜரின் தானான திருமேனி பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ராமானுஜர் பரமபதம் அடைந்த பிறகு, அவரது உடல் ஒரு வாகனத்தில் அமர்த்தப்பட்டு, அவரது சீடர்கள், ஜீயர்கள், பல்லாயிரக் கணக்கான வைணவர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ ராமானுஜர் உடல் தாங்கிய வாகனம் இறுதி ஊர்வலத்தை தொடங்கியது. ஸ்ரீரங்க பெருமாள் அரையர் தலைமையில் அரையர்கள் திருவாய்மொழி ஓதியபடி பின் தொடர்ந்தனர். இறுதி ஊர்வலம் தொடங்கிய நேரத்தில் ரங்கநாதர் கோவிலில் இருந்து அசரீரி ஒன்று ஒலித்ததாக ஐதீகம். ‘ராமானுஜன் எந்தன் மாநிதி’ என்றும், ‘ராமானுஜன் எந்தன் சேம வைப்பு’ என்றும் அந்தக்குரல் ஒலித்தது. எனவே, ராமானுஜரின் உடல் என்ற சேம வைப்பை அரங்கன் திருக்கோவில் வளாகத்தில், துறவிகளுக்கான சம்ஸ்கார விதிகளின்படி பள்ளிப் படுத்த பெருமாளின் கட்டளையாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி மறைந்த துறவிகளின் உடலுக்கு எரியூட்டும் வழக்கம் இல்லை. மாறாக, அவர்களது உடல் பள்ளிப்படுத்தப்படும். அதாவது, சமாதியில் அமர வைக்கப்பட்ட நிலையில் வைத்து, தக்க முறைகளின்படி சமாதி மூடப்படும். அதுபோல ராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படுத்தப்பட்டது. அங்கே தற்போது ராமானுஜர் என்று அழைக்கப்படும் உடையவரின் சன்னிதி உள்ளது. அங்கே, பத்மாசன நிலையில் அமர்ந்து, தியானத்தில் உள்ள திருமேனிபோல இன்றும் உயிரோட்டமாக காட்சி தருகிறது.
ராமானுஜரின் கண்கள் திறந்த நிலையில் இருப்பதோடு, கால் விரல்கள், நகங்கள், கைகளில் ரோமங்கள் இருப்பதையும் காணலாம். அவரது உடல் பச்சை கற்பூரம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து தயார் செய்யப்பட்ட கலவையினால் மூடப்பட்டுள்ளது. 1137-ம் ஆண்டு காலமான ராமானுஜரின் உடல் அப்படியே பல்வேறு திரவியங்கள் மற்றும் சூரணங்களால் பதப்படுத்தப்பட்டு, பள்ளிப்படுத்தல் என்ற முறையில் ஸ்ரீரங்கம் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 800 ஆண்டுகளுக்கும் மேலாக யோக உஷ்ணத்தின் அடிப்படையில், அந்த உடல் இறுகி, நிலை மாறாமல் இருக்கிறது. அந்த இடத்தின் மீதுதான் தற்போது எம்பெருமானார் என்று சொல்லப்படும் ராமானுஜரின் சன்னிதி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது. இப்போதும் அவரது திருமேனி வைத்தவாறே உள்ளே இருப்பதாகவும், அதற்கு மேற்புறத்தில் இப்போது உள்ள ரூபம்தான் ‘தானான மேனி’ என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த திருமேனிக்கு திருமஞ்சனம், அதாவது எந்த விதமான அபிஷேகமும் நடைபெறுவதில்லை. வருடத்துக்கு இருமுறை பச்சைக் கற்பூரம் மற்றும் குங்குமப் பூ ஆகியவற்றால் ஆன ஒருவகை குழம்பு மட்டுமே சாற்றப்படுகிறது.
 

Srirangam temple festivals ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திருவிழாக்கள்:
ஜேஸ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்)

சேர்ந்திருக்கும் அசுத்தங்களை நீக்கிவிடுவிப்பதற்காக ஆனி தமிழ்மாதத்தில் (ஜீன் – ஜீலை கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் மூலஸ்தான கருவறை சுத்தம் செய்யப்படும், கோயிலில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மூலிகை எண்ணெய் அபிஷேகம் பெரிய பெருமாளுக்குச் செய்யப்படும். உற்சவர் நம்பெருமாள் மற்றும் தேவியர்களின் தங்கக் கவசம் (தங்கதட்டுகள் பொற்கொல்லரால் சுத்தம் செய்யப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக் குடங்களில் புனித காவிரித் தீர்த்தம் எடுத்துக் காண்டு வருவதற்கு நிறைய பூசாரிகளும், பக்தர்களும் காவிரி ஆற்றுக்குச் செல்வார்கள். தங்கக்குடம் யானை மீது வைத்து கொண்டுவரப்படும். தங்கக்குடம், விஜயரங்க சொக்க நாயக்கரால் 1734ல் நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கிடையே இது, சில கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது, அதற்குப் பிறகு கடவுள்களின் கிருபையில் இது மீட்கப்பட்டது. இந்தத் தங்கக்குடத்தில் தெலுங்கு மொழியில் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறைய வெள்ளிக் குடங்களில் புனித காவிரித்தீர்த்தம நிரப்பப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்படும். காவிரியிலிருந்து கோயிலுக்கு வரும் வழியில் வேதங்கள் ஓதப்படும். அதன்பிறகு, மேற்குப் பக்கத்தில் குடங்கள் வைக்கப்பட்டு, அனைத்து விக்கிரகங்களும் ‘திருவெண்ணெயாழி பிரகாரத்தில்’ உரிய ஸ்தானத்தில் அமர்த்தப் (வைக்கப்) படும். தங்கக் கவசங்கள் விக்கிரகஙிகளிலிருந்து களையப்பட்டு ஜீயர் சுவாமிஜி மற்றும் வதுலா தேசிகர் சுவாமியிடம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு கவசங்கள் பொற்கொல்லரால் சுத்தம் செய்யப்படும். பொது வழிபாட்டிற்குப் பிறகு மாலையில் கவசங்கள் அணிவிக்கப்படும்.
பவித்ரோத்ஸவம்
தமிழ் மாதம் ஆனியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) ரங்கநாத சுவாமி பெருமாள் அணியும் புனித நூல் (போர்வை) போற்றியும் மற்றும் தினசரி பூஜை சடங்குகளில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் இது, தமிழ் மாதம் ஆனியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) கொண்டாடப்படுகிறது. முதல் நாளன்று யாகசாலையில் உற்சவருக்கு 365 முறை திருவராதனம் நடத்தப்படுகிறது மற்றும் இரண்டாவது நாளன்று மூலஸ்தான கர்ப்பக்கிருஹத்தில் (கருவறையில்) அனைத்து தெய்வங்களுக்கும் 1008 முறை திருவராதனம் நடத்தப்பட்டு, பூகண்டி சேவை (அங்கோபங்க சேவை) எனப்படும் புனித நூல் போர்வை கொண்டு மறைக்கச் செய்யப்படுகிறது. இந்த விழா, பெருமாளுக்கு செய்யப்படும் தினசரி பூஜையில் நிகழும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த விழா சேரனை வென்றான் மண்டபம் என்கிற பவித்ர மண்டபத்தில் நடத்தப்படுகிறது. இந்த மண்டபம் ஜடவர்ம சுந்தரபாண்டியனால் நிறுவப்பட்டது. முஸ்லிம் படையெடுப்பிற்குப் பிறகு, 60 ஆண்டுகளுக்குப் பிறகு 1371-ல் பெருமாளும் மற்றும் தேவியர்களும் நுழைந்தனர். மேற்குறிப்பிட்ட மண்டபத்தில் தேவியர் கருவறை (கர்ப்பக்கிருஹம்) நிறுவப்பட்டது. இந்த விழா முதலில் பிரம்மாவால் தொடங்கப்பட்டது. இந்த விழாவின் காரணமாக அனைத்து விக்கிரங்களுக்கும் புனித பருத்திநூல் போர்வை (பவித்ரம்) அணிவிக்கப்படுகிறது.

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
ஶ்ரீ ரங்கநாதசாமி கோயில் வளாகத்திற்குள் உள்ள அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் கிருஷ்ண பெருமானின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக கிளி மண்டப கிருஷ்ணர் கோயிலில், தனது தந்தை நந்தகோபன் மற்றும் தனது தாயார் யசோதா மற்றும் ரோஹினி ஆகிய பொற்றோருடன் கிருஷ்ணர் சிலை கோயில் முன்னிலையில் நிறுவப்படும். புனித தீர்த்தம் சுபிஷேகம் செய்யப்படும். நான்கு சித்திரை தெருக்களில் கிருஷ்ணர் மற்றும் நம்பெருமாள் பவனி வரும். இந்த விழாவின் காரணமாக ஶ்ரீ பண்டாரத்திற்கு நம்பெருமாள் விஜயம் செய்வார். இவர்களுடைய திருமஞ்சனம் நம்பெருமாளுக்கு செய்யப்படும்.
ஊஞ்சல்

ஊஞ்சலில் சாத்தியமான குறைபாடுகளை நீக்கி நிவர்த்திசெய்வதற்காக தமிழ் மாதம் ஐப்பசியில் இவ்விழா (அக்டோபர் – டிசம்பர்) நடைபெறும். இவ்விழா டோலோத்ஸ்வம் என வழங்கப்பெறுகிறது. இவ்விழா கந்தடை இராமானுஜரால் 1489ல் தொடங்கப்பட்டது. இது இப்போது 9 நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. 1வது மற்றும் 7வது நாளில் தேவியுடன் தொட்டிலுக்கு பெருமாள் வருவார், எஞ்சிய நாட்களில் தனியாகத் தொட்டிலில் இருப்பார். பெருமாள் முன்னிலையில் ஆரயார் தினசரி பாட்டு பாடுவார். கடைசி நாள் சந்திரபுஷ்கரணிக்கு பெருமாள் விஜயம் செய்வார், தீர்த்தவாரி நடத்தப்படுகிறது. அதன்பிறகு ஊஞ்சல் மண்டபத்திற்கு நம்பெருமாள் வருவார். திருமஞ்சனம் நடத்தப்படும். அதன்பிறகு இரவில் மூலஸ்தான கர்ப்பகிருஹதிற்கு சென்றுவிடுவார். இந்த ஊஞ்சல் திருவிழா, ஐப்பசி மாதத்தின் தேய்பிறைக்காலத்தில் (கிருஷ்ணபக்‌ஷம்) ஏகாதசிக்கு எட்டு நாட்களுக்கு முன்பு ஊஞ்சல் திருவிழா தொடங்கும். ஏகாதரி நாளில் கடைசி நாள் விழா வரும்.
கைசிக ஏகாதசி
இந்த விழா, ஏகாதசிக்கு முப்பது நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படும். சந்தான மண்டபத்திற்கு பெருமாள் வருவார், திருமஞ்சனம் நடத்தப்படும். அதற்குப் பிறகு மாலையில் கர்ப்பகிருஹத்திற்கு திரும்பிச் சென்றுவிடுவார். மறுபடியும் இரவில் அர்ஜூண மண்டபத்திற்கு பெருமாள் வருவார். இங்கு 365 பூஜைகள் நடத்தப்படும். பெருமாளுக்கு 365 ஆடைகள் அணிவிக்கப்படும். நள்ளிரவில் கைசிக புராணம் ஒப்புவிக்கப்படும். கர்ப்பகிருஹத்திற்கு திரும்பும்போது பச்சை கற்பூரம் (சுத்திகரிக்கப்பட்ட கற்பூரம்) தூவப்படும் மற்றும் அதன்பிறகு கர்ப்பகிருஹத்திற்குள் நுழைந்துவிடுவார்.

ஏகாதசி
இந்த மிகவும் முக்கியமான திருவிழா, தமிழ் மாதம் மார்கழியில் (டிசம்பர் – ஜனவரி) முழு இருபத்தொரு நாட்கள் பகல் பத்து, இரவு பத்து என இரண்டாகப் பிரிந்து ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி தினத்தில், ரங்கநாதப் பெருமாள் அற்புதமான அலங்கார ஆடையணிந்து, பரமபத வாசல் வழியாக ஒரு மகத்தான ஊர்வலத்தில் பவனி வந்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் இலட்சக்கணக்கான பக்தர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் மற்றும் பரவசத்திற்கிடையே ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தை அடைகிறார். இந்த தருணம், கோயிலில் நடத்தப்படும் அனைத்து திருவிழாக்களிலும் உச்சித் தருணமாகும். எல்லா நாட்களில் இந்த நாளில் மட்டுமே ரங்கநாத பெருமாள் உண்மையான, நிஜமான இராஜாவாகிறார் மற்றும் இவர், ஶ்ரீ ரங்கராஜர் எனப்படுகிறார். பிரத்யேகமாக எழுப்பப்பட்டு, அருமையாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பந்தல் மூலம் விஸ்தரிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஆயிரங்கால் மண்டபத்தில் தனது தெய்வத்திரு தர்பாரை ரங்கராஜா நடத்துகிறார், நாள் முழுக்க நாளாயிர திவ்யப்பிரபந்தம் ஓதப்படுகிறது மற்றும் பின்னிரவில் மட்டுமே அவர் கோயிலுக்கு திரும்புகிறார். அலைமோதும் பக்தர்கள் கூட்டம், விடியற்காலை முதல் நள்ளிரவு வரை விடாமல் வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். இடைவிடாமல் பஜனைகளில் ஈடுபட்டுக்கொண்டும், நாள்முழுக்க உண்ணா நோண்பிருந்து கொண்டும் மற்றும் இரவு முழுக்க இடையறாமல் தூங்காமல் விழித்துக் கொண்டுமிருக்கும் பக்தர்கள் குழுவின் துடிப்புமிக்க ஜால்ரா இசைக்கு பாடிக்கொண்டும் மற்றும் ஆடிக்கொண்டும் இருந்தனர். உண்மையிலேயே, இது கடவுள்கள் காணவேண்டிய காட்சியாகும். உண்மையிலேயே மண்ணுலகில் ஒரு சொர்க்கலோகமாகும்!
விருப்பன் (சித்திரைத் தேர்)

இது தொழில் குறைபாடுகளை சீர்செய்யக்கூடிய மற்றும் தமிழ் மாதம் பங்குனியில் (மார்ச்-ஏப்ரல்) நடைபெறக்கூடிய மாபெரும் திருவிழா ஆகும். விஜயநகர அரசவம்சத்தைச் சேர்ந்த விருப்பண்ண உடையார் என்ற பெயர் கொண்ட ஒரு அரசன் சித்திரைத் திருவிழாவை 1383ல் நிறுவினார். முஸ்லிம்கள் படையெடுப்புக்குப் பிறகு, 1371ல் (வைகாசி மாம் 17ம் நாள்) கர்ப்பக் கிரஹத்திற்கு ரங்கநாத பெருமாள் கொண்டுவரப்பாட்டார். அந்த நேரத்தில் மிகவும் சீரழிந்த நிலையில் கோயில் இருந்தது. 1377ல், இக்கோயிலை புதுப்பிப்பதற்காக பதினேழாயிரம் தங்க நாணயங்களை விருப்பண்ணன் அரசன் கொடுத்தான். 60 ஆண்டுகள் கழித்து, கோயில் புதுப்பிக்கப்பட்ட பிறகு 1383ம் ஆண்டில் சித்திரைத் திருவிழா தொடங்கியது. இந்த திருக்கோயிலின் நலன் கருதி 52க்கும் மேற்பட்ட கிராமங்களை மன்னன் விருப்பண்ணன் ஒப்படைத்தான். 1383ல் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. அருகிலிருந்த கிராம மக்கள் ஶ்ரீரங்கத்திற்கு திரண்டுவந்தனர். இந்தத் திருவிழாவில் 8வது மற்றும் 9வது நாட்களை கிராம மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். கிராம மக்கள் தங்கள் வயல் பண்ணைகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் மற்றும் தானியங்களை நன்கொடையாகக் கொடுத்து வந்தனர். இந்தத்திருவிழா, ரேவதி நட்சத்திரத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு தொடங்குகிறது. அந்த நாளில் சித்திரைத் தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அங்குரார்பணம் (விதைகளை முளைக்க விடுதல்)
விஷ்வக்சேனர் (திருமாலின் சேனாதிபதி) மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் குருக்கள் புடைசூழ தாயார் சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். குருக்கள் வில்வ மரத்தின் கீழ் உள்ள மணலில் பூஜைகளை மேற்கொள்கின்றனர். சில குருக்கள் ஆற்றங்கரைக்குச் சென்று மணலை எடுக்கின்றனர். அவர்கள் “பூசுத்தம்” சொல்லி வில்வ மரத்தின் கீழிருந்து எடுத்துச் சென்ற மணலையும் ஆற்றங்கரை மணலையும் சுத்தமான நீரில் நனைத்து சுத்தி செய்யப்பட்ட மண் பானைகளுக்குள் ஒன்றாக போட்டு கலக்குகின்றனர். அந்த பானைகளுக்குள் விதைகள் விதைக்கப்பட்டு அதன் பிறகு அவை யாகசாலையில் வைக்கப்படுகின்றன. ஒரு சில நாட்களில் விதைகள் முளைவிடுகின்றன.

நகரசோதனை (வீதி ஆய்வு)
விஷ்வக்சேனர் அனைத்து நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வருகிறார். அவர் திருமால் வருகை தருவதற்கு முன்னதாக அனைத்து நான்கு வீதிகளையும் ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வு விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு நடத்தப்படுகிறது. இது, நகரசோதனை என அழைக்கப்படுகிறது
முதல் நாள் (கொடியேற்றம்)

முதல் நாள் அதிகாலையில் நான்கு சித்திரை வீதிகளுக்கு கொடி (கேன்வாஸ் துணியில் கருடர் படம் வரையப்பட்டது) கொண்டு வரப்படுகிறது. அதன் பிறகு, திருவிழா நடைபெற்றுக் கொண்டிருப்பதை குறிக்கும் வகையில் திருமாலின் முன்னிலையில் கொடியேற்றப்படுகிறது. கொடியேற்றத்திற்குப் பிறகு, திருமால் கண்ணாடி அறை சேர்கிறார் (பொதுமக்கள் வழிபாடு திருவிழாவின் 1வது மற்றும் 7வது நாளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது). மாலையில் திருமால் உபயநாச்சியாருடன் நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில் பொய்கையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.
இரண்டாம் நாள்
காலையில் நம்பெருமாள் நான்கு சித்திரை வீதிகளிலும் பல்லக்கில் ஊர்வலமாக வலம் வருகிறார். அதே நாள் மாலையில் நம்பெருமாள் நான்கு சித்திரை வீதிகளிலும் கற்பகவிருட்ச (விரும்பியதை அளிக்கும் கற்பகமரம்) வாகனத்தில் வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில் பூதத்தாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன

மூன்றாம் நாள்
காலையில் சிங்க (சிம்ம) வாகனமும் மாலையில் யாலி (கற்பனையான மிருகம்) வாகனமும் பயன்படுத்தப்படுகிறது. திருமாலின் முன்னிலையில் பேயாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன
நான்காம் நாள்

காலையில் நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்திலும் மாலையில் கருட வாகனத்திலும் வீதி வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில் திருமழிசையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.
ஐந்தாம் நாள்
காலையில் நம்பெருமாள் சர்ப்ப (சேஷ வாகனம்) வாகனத்திலும், மாலையில் ஹனுமந்த வாகனத்திலும் வீதி வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில் நம்மாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன

ஆறாம் நாள்
காலையில் நம்பெருமாள் ஹம்ச (அன்னம்) வாகனத்திலும், மாலையில் திருமாலுக்கு தேங்காய் தண்ணீர் அபிஷேகம் செய்யப்பட்டு யானை வாகனத்திலும் வீதி வலம் அழைத்து வரப்படுகிறார். திருமாலின் முன்னிலையில் நம்மாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.
ஏழாம் நாள்

காலையில் பக்தர்கள் கண்ணாடி அறையில் தரிசன சேவைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியாருடன் திருச்சிவிகையில் புறப்பட்டு திருக்கொட்டாரம் (நெற்களஞ்சியம்) கண்டு வீதிவலம் வருதல். இரவு தாயார் சந்நதியில் திருமஞ்சனம் கண்டருளல். இந்த ஆலயத்தில் பெருமாளுடன் உபயநாச்சியாராக இருவரும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். மற்றைய ஆலயங்களில் நின்றகோலம்தான். அதன் பிறகு நள்ளிரவில் கண்ணாடி அறை சேர்கிறார். திருமாலின் முன்னிலையில் திருமழிசையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.
எட்டாம் நாள்
காலையில் திருமால் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருதல் பின் ரெங்கவிலாச மண்டபம் அடைந்து மாலையில் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருதல். நம்பெருமாள் சித்திரை தேர் கொட்டகை அருகே வரும் போது குதிரையில் நான்குக் கால் பாய்ச்சலில் செல்கிற ஒரு தனித்துவமான தரிசனம் அருளப்படுகிறது. திருமாலின் முன்னிலையில் திருமங்கையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன

ஒன்பதாம் நாள் (தேரோட்டம்)
அதிகாலையில் நம்பெருமாள் சித்திரைத் தேரில் நான்கு சித்திரை விதிகளிலும் உலா வருகிறார். அதன் பிறகு திருமால் ரேவதி மண்டபம் அடைந்து, திருமஞ்சனம் கண்டருளல். திருமாலின் முன்னிலையில் திருமங்கையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.
பத்தாம் நாள் (சப்தாவரணம்)

காலையில் திருமால் சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளல். மாலையில் திருமால் இராமானுஜரின் பாடல்களைக் கேட்பதற்கு வசதியாக நம்பெருமாள் அமைதியான முறையில் (இந்த உலாவின் போது இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுவதில்லை) நான்கு ரத வீதிகளிலும் வலம் வருகிறார். நம்பெருமாள் இராமானுஜரின் கோவிலுக்கு செல்கிறார், அங்கு இராமானுஜரால் உள்ளன்போடு வரவேற்கப்படுகிறார். நம்பெருமாளுக்கு இராமானுஜர் தேங்காய் தண்ணீரை காணிக்கையாக செலுத்துகிறார். நம்பெருமாளுக்கு தேங்காய் தண்ணீர் செலுத்தப்பட்ட பிறகு அது இராமானுஜருக்கு செலுத்தப்படுகிறது
பதினோறாம் நாள்
காலையில் திருமால் கருட மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளல். மாலையில் நம்பெருமாள் முழுதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நான்கு ரத வீதிகளிலும் வலம் வருகிறார்.

இந்தத் திருவிழா திருமால் மனிதர்களிடத்தில் மட்டுமல்ல விலங்குகளிடத்திலும் அருள்பாலிப்பார் என்பதை விளக்குகிறது. கஜேந்திரன் என்னும் பெயருடைய ஒரு யானை எந்தவொரு பிரதிபலனையும் கருதாமல் ஒரு குளத்தில் இருந்து தினமும் மலர்களை பறித்து திருமாலின் பாதங்களில் காணிக்கையாக சாத்துகிறது. யானை இந்தச் சேவையை மிகவும் விரும்பி செய்கிறது. எனவே, யானை பகவானிடம் இருந்து எதையும் கேட்கவில்லை. இதனால் திருமால் விஷ்ணுவுக்கு யானையை மிகவும் பிடிக்கிறது. வாய்ப்புக் கேடாக, ஒரு நாள் யானை மலர்களை பறித்துக் கொண்டிருந்த போது அதன் காலை முதலை கவ்வுகிறது. யானையால் வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கூட, திருமாலுக்கு வழமையாக செய்து வருகிற தனது சேவை பாதிக்கப்படுமோ என கவலைப்படுகிறது. யானை தனது சேவையை தொடர்ந்து செய்வதற்கு அருளுமாறு திருமாலை தொடர்ச்சியாக இறைஞ்சி கேட்கிறது, ஆனாலும் வலி மற்றும் வேதனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அது கேட்கவில்லை. திருமால் அவ்விடத்திற்கு விரைந்து சென்று முதலையைக் குத்திக் கொன்று யானையைக் காப்பாற்றி அருளினார். இந்த நிகழ்ச்சி கஜேந்திர மோட்சம் என்ற பெயரில் காவிரி ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்படுகிறது
இந்தத் திருவிழா, திருமாலை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகின்ற மலர்களின் அசுத்தங்களை சுத்தப்படுத்துவதற்காக தமிழ் மாதமான சித்திரையில் (ஏப்ரல்–மே) கொண்டாடப்படுகிறது.
இந்தத் திருவிழா இராம அவதாரத்தின் நினைவுக்குறிப்பாகக் கொண்டாடப்படுகிறது என்றாலும் கூட ஸ்ரீரங்கத்தில் சற்று வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. ஆழ்வார்களுள் ஒருவரும் இராமரின் சீடருமான குலசேகராழ்வார் தனது மகளை ரங்கநாதருக்கு திருமணம் முடித்தார். இந்தத் திருவிழா அர்ஜூனா மண்டபத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ரங்கநாத ஸ்வாமியும் சேரகுலவள்ளி நாச்சியாரும் (குலசேகராழ்வாரின் மகள்) அருகருகே அமர்ந்திருக்கின்றனர் மற்றும் திருமஞ்சனம் கண்டருளல்.

தமிழ் மாதம் வைகாசியில் (மே-ஜூன்) கொண்டாடப்படுகிறது. விஜயநகரப் பேரரசின் மன்னர் அண்ணப்ப உடையாரால் 1444-ஆம் அண்டில் வஸந்த மண்டபம் கட்டப்பட்டது. வஸந்தோத்ஸவம் நடைபெறுவதற்காக மல்லிதேவன் புத்தூர் கிராமம் திருவிடையாட்டமாகத் (தானமாகத்) தரப்பட்டது. வஸந்தோத்ஸவம் பௌர்ணமிக்கு (முழு நிலா நாள்) 8 நாட்களுக்கு முன்னதாக தொடங்குகிறது. பௌர்ணமி திருவிழா முடிவுக்கு வந்ததும் திருமால் குதிரை வாகனம் ஏறி நான்கு சித்திரை வீதிகளில் உலா வந்து வஸந்த மண்டபம் சேர்கிறார். வஸந்த மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளல். 17) முதல் திருநாள், ஏழாந் திருநாட்களில் நம்பெருமாள் இரண்டு உபய நாச்சிமாரோடு வஸந்த மண்டபத்தில் உத்ஸவம் கண்டருளுவார். எஞ்சிய நாட்களில் திருமால் மட்டுமே வஸந்த மண்டபத்தில் உத்ஸவம் கண்டருளுவார். திருமால் ஒவ்வொரு நாளும் மூலஸ்தானத்திற்கு திரும்ப வரும் போதெல்லாம் கம்பர் மண்டபத்திற்கு வருகை தருகிறார். ஒவ்வொரு நாளும் திருமால் முன்னிலையில் ஆழ்வார் பாடல்கள் பாடப்படுகின்றன. ஸ்ரீதேவி ரங்கநாயகி கோவிலிலும் வஸந்தோத்ஸவம் மேற்கொள்ளப்படுகிறது.
Srirangam temple pooja timings / worship details
பூஜை அட்டவணை – ஶ்ரீ ரங்கநாதர் சன்னதிவிஸ்வரூப சேவை 06:00 to 07:15பூஜை நேரம் – (தரிசனம் கிடையாது) 07:15 to 09:00பொது தரிசன நேரம் 09:00 to 12:00பூஜை நேரம் – (தரிசனம் கிடையாது) 12:00 to 13:15தரிசனம் நேரம் 13:15 to 18.00பூஜை நேரம் – (தரிசனம் கிடையாது) 18.00 to 18:45தரிசனம் நேரம் 18:45 to 21.00

9 மணிக்கு மேல் கருவறை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி கிடையாதுசிறப்பு தரிசனம் – Rs.250/- ஒரு நபருக்கு .விஸ்வரூப சேவை – Rs.100/- ஒரு நபருக்கு.பொது தரிசனம் – அனைத்து சேவை நேரங்களிலும்* * மேலே குறிப்பிடப்பட்ட நேரம் விழா நாட்களில் மாற்ற உட்பட்டவை
திருமஞ்சணம்
பக்தர்கள், தாங்கள் விரும்பும் தேதியில் தாங்கள் விரும்பும் கோயில் திருமஞ்சனத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொகையை செலுத்தி பங்களிக்கலாம்

தற்போதைய கட்டண வீதத்திற்கேற்ப கீழே கட்டணத்தொகை குறிப்பிடப்பட்டுள்ளது – ஏதும் மாற்றம் இருக்குமானால் அது உடனுக்குடன் மாற்றப்படும்.
இந்த திட்டத்திற்குரிய பங்களிப்புகளை, விவரங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நிகழும் சூழ்நிலைகளின் காரணமாக, நீங்கள் விரும்பி முன்பதிவு செய்த திருமஞ்சண தேதிகள், பிரசாதங்கள் ஆகியவை நிர்வாகத்தால் மாற்றப்படலாம். இது குறித்த தகவல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு srirangam@tnhrce.org. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
பணம் செலுத்தும் முறை :

1. நீங்கள் காசோலை / கேட்பு வரைவோலை (DD) / பணம் கொடுப்பாணை (பே ஆர்டர்) / பண விடை (மணி ஆர்டர்) ஆகிய ஏதாவதொருவகையில், அருள்மிகு ஶ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயில், ஶ்ரீ ரங்கம் என்ற பெயரில், திருச்சியில் பணம் கொடுபடும் வகையில் அவற்றை அனுப்பி வைக்கலாம்2. நீங்கள், எங்களுடைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் பணத்தொகையை நேரடியாகவும் டெபாசிட் செய்யலாம். நேரடி டெபாசிட் செய்வது குறித்த விவரங்கள்: அன்னதானத்திற்கு – வேறு கணக்கு எண் பயன்படுத்தவும். திருமஞ்சணம் (01/07/2012 முதல் புதிய கட்டணவீதங்கள் நடைமுறைக்கு வந்திருக்கிறது)Thirumanjanam (New Rates Effective from 01/07/2012)வ.எண் பூஜை பெயர் தற்போதைய கட்டண வீதம். பொருந்தாத நாட்கள்1 வைரமுடி சேவை inr 3,500/-2 ஹனுமார் திருமஞ்சணம் inr 780/- சனிக்கிழமைகளில் பொருந்தாது3 சக்கரத்தாழ்வார் திருமஞ்சணம் inr 1075/- சனிக்கிழமைகளில் பொருந்தாது4 சிங்கர் திருமஞ்சணம் inr 1500/- சனிக்கிழமைகளில் பொருந்தாது5 தன்வந்திரி திருமஞ்சணம் inr 1200/- வியாழன் மற்றும் & சனிக்கிழமைகளில் பொருந்தாது6 திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் பலிபீட திருமஞ்சனம் inr 2500/-பக்தர்கள், கட்டணத் தொகையை 1 நாள் முன்னதாக, முறைப்படி கோயிலுக்கு பொறுப்பு வகிக்கக்கூடிய பணியாளரிடம் செலுத்தலாம். பெறப்பட்ட பணத்திற்கு உடனடியாக கோயில் இரசீது வழங்கப்படும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்  வழங்கப்படும் பிரசாதங்கள்
சக்கரத்தாழ்வார் சன்னதி –  தயிர் சாதம், பழக்கலவை (பஞ்சாமிர்தம்), புனித தீர்த்தம்ஹனுமார் சன்னதி – தயிர் சாதம், பழக்கலவை (பஞ்சாமிர்தம்), புனித தீர்த்தம்தன்வந்திரி சன்னதி – இனிப்புப் பொங்கல், பழக்கலவை (பஞ்சாமிர்தம்), புனித தீர்த்தம்சிங்கர் சன்னதி  – இனிப்புப் பொங்கல், பழக்கலவை (பஞ்சாமிர்தம்), புனித தீர்த்தம்

Srirangam temple address and contact information
இணை ஆணையர் / செயல் அலுவலர் (நிர்வாக அதிகாரி)அருள்மிகு ஶ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயில்ஶ்ரீரங்கம், திருச்சி – 620 006.தமிழ்நாடு, இந்தியா.
Phone : +91 431 -2432246Email : srirangam@tnhrce.comEmail : srirangamtemple@gmail.comYatri Nivas : +91 9486482246

Srirangam Temple sri ranganatha swamy temple route map
108 பெருமாள் நாமங்கள்
ஸ்ரீ வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்

வேங்கடேச சுப்ரபாதம்
திருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும் சேவைகள் பற்றி தெரியுமா?
source: srirangam.org, religious books, perumal perumaigal and facebook

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top