நவரத்தின மோதிரம் பலன்கள்

கோவிலில் இறைவனுக்கு அர்ச்சனை செய்யும் புரோகிதர்கள் தங்கள் கைகளில் நவரத்தின மோதிரம், வெள்ளி மோதிரம் அல்லது தங்கள் ராசிக்கு உரிய நிறத்தில் கல் வைத்த மோதிரம் என ஏதேனும் ஒன்றை நிச்சயம் அணிந்திருப்பார்கள். இவ்வாறு வியாபாரிகள், நகை கடை உரிமையாளர்கள் போன்றோரும் இவ்வாறான மோதிரங்களை தங்கள் கைகளில் அணிந்திருப்பார்கள். இப்படி மோதிரம் அணிய பல்வேறு காரணங்கள் இருக்கிறது. இவற்றை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்பது கிடையாது. இதனை குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே தங்கள் கைகளில் அணிந்திருக்க முடியும். அப்படி இல்லாமல் தனக்கு தோன்றியவாறு இவ்வாறான மோதிரங்களை அணிந்து கொண்டால் உங்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளும், வருமான பிரச்சனைகளும் ஏற்படும். வாருங்கள் இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணிய வேண்டும், எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இந்த நவரத்தின மோதிரத்தை யார் அணிய வேண்டும், எந்த நிறத்தில் அணிய வேண்டும் என்பதை பற்றி சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனை அணிந்து கொள்பவர்களுக்கு நிச்சயம் அதிர்ஷ்டம் உண்டாகும், நன்மை மட்டுமே நடக்கும். அவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கொள்வார்கள். அப்படி செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் உள்ள அனைவரும் இந்த நவரத்தின மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.
நவரத்தின மோதிரத்தை அணிந்து கொள்வதன் மூலம் புகழ், வெற்றி, லாபம் அனைத்துமே அவர்களுக்கு விரைவாக கிடைத்துவிடும். எனவே ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஏற்ற நேரத்தில் இந்த மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும். இப்படி எதையும் ஆராயாமல் நவரத்தின மோதிரத்தை அணிந்து கொண்டால் அவர்களுக்கு நிச்சயம் தலைவலி, வாந்தி, ஜுரம் போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். இதனை பொறுத்து அவர்களுக்கு இது ஏற்றதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் நவரத்தின மோதிரத்தை மேஷ ராசிக்காரர்கள், மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் அல்லது விருச்சக ராசிகாரர்கள் இவர்கள் எந்த வித யோசனையும் இல்லாமல் இதனை அணிந்து கொள்ளலாம். மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் நவரத்தின மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.
அதேபோல் பிறந்த தேதியின் அடிப்படையிலும், கூட்டு எண் அடிப்படையிலும் இந்த நவரத்தின மோதிரத்தை அணிந்து கொள்ள முடியும். அவ்வாறு 9, 18, 27 இந்த எண்களில் பிறந்த அனைவருமே அணிந்து கொள்ளலாம். அதே போல் கூட்டு எண் 9 வரும் தேதிகளில் பிறந்தவர்களும் அணிந்து கொள்ளலாம்.
அவ்வாறு 2 மற்றும் 7 தேதிகளில் பிறந்தவர்கள் கட்டாயம் நவரத்தின மோதிரத்தை அணியக் கூடாது. தவறியும் அணிந்து கொண்டால் அவர்களுக்கு நடப்பவை அனைத்தும் பெரும்பாலும் கெடுதலாகவே இருக்கும். எனவே தங்களுக்கு நன்மை கொடுக்காமல் இருந்தால் இவற்றை அணிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லதாகும். ஒரு சிலருக்கு இவற்றின் பலன் நன்மையை கொடுத்தால் தவறாமல் அணிந்துகொள்ளலாம்.

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top