கிருத்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். இது கத்தி போல் அமைந்துள்ள 6 நக்ஷத்திரக் கூட்டங்கள் இவை. இதன் முதல் பாதம் மேஷ ராசியிலும், மற்ற மூன்று பாதங்களும் ரிஷப ராசியிலும் அமையும். இந்த நக்ஷத்திரத்தை அக்னி சம்பந்தமான நக்ஷத்திரம் என்றும் சொல்லுவார்கள். இந்த ராசிநாதன் செவ்வாய் அல்லது சுக்கிரன். நக்ஷத்திர அதிபதி சூரியன்.
பொதுவான குணங்கள்:
மகிழ்ச்சியை விரும்புபவர்கள், நேசமும் நட்பும் உள்ளவர்கள், உயரிய கொள்கைகள் உள்ளவர்கள், நல்ல தோற்றம் உள்ளவர்கள், சட்டென கோபம் வருவதும் வந்த கோபம் உடனே மறைவதும் இவர்களின் இயல்பு. நல்ல நண்பர்கள். நேர்மையான எதிரிகள். எதைச் செய்தாகிலும் நினைத்ததைச் சாதிக்கும் எண்ணம் இருக்கும். சுதந்திரமானவர்கள். பிடிவாத சுபாவம் இருக்கும். ஆணவமும், கர்வமும் இருக்கும்.
27 நட்சத்திரங்களில் சூரியனின் முதல் நட்சத்திரமாக வருவது கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. மிக உயரிய அரசாங்க பதவிகளையும், உட்சபட்ச அதிகாரங்கள் பெற்ற பணிகளையும் செய்பவர்களாக கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இருக்கின்றனர். கார்த்திகை நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தை மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் பகவானும், 2, 3, 4 – ம் பாதங்களைக் ரிஷப ராசிக்குரிய சுக்கிர பகவானும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
உலகில் அனைத்து விடயங்களில் இருக்கும் நன்மை, தீமைகளை நன்கு அலசி ஆராய்பவர்களாகவும். எந்த ஒரு பிரச்சனையிலும் எல்லாவற்றையும் கேட்டறிந்து நியாயமான தீர்ப்பை வழங்கும் நீதிபதியாகவும் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் விளங்குகிறார்கள். மேலும் கல்வி மீது மிகுந்த ஆர்வமுள்ளவர்களாகவும், சிறந்த குணங்களை கொண்ட குணவனாகவும் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிளிர்கிறார்கள். நட்சத்திர மாலை என்கிற பழைய ஜோதிட சாஸ்திர நூல் கூறுகிறது. அழகிய தோற்றமும், வலிமையான உடலும், உஷ்ண தன்மை கொண்டவர்களாக கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். முகத்தில் தேஜஸ் இருக்கும். மிகுவும் புகழ் பெறக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். குறைந்த நேரமே தூங்க கூடியவர்கள். அரசர்களின் நட்பையும், அதனால் வாழ்வில் பல நன்மைகளையும் பெறுவார்கள். இனிப்பு பண்டங்களை மிகவும் விரும்பி உண்ணக்கூடியவர்களாக இருப்பார்கள்.
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்கள். நல்ல உயரமும், நடுத்தர உடல் வாகும், பரந்த நெற்றியும் கொண்டவர்கள். எப்போதும் இன்முகத்துடன் இருப்பார்கள். தசை பலத்தைவிட எலும்பு பலம் உங்களுக்கு அதிகம். எதையும் நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தில் மிகுந்த முன்கோபக்காரர்களாக இருப்பார்கள். சூடான உணவுகளை அதிகம் விரும்பி உண்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் பழைய உணவுகளைத் தொடக்கூட மாட்டார்கள். பசி பொறுக்காதவர்கள். வீரக்கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் பெறுவார்கள். காதல் போன்ற விடயங்களிலிருந்து கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் விலகியே இருப்பார்கள். திருமண வாழ்க்கையிலோ கறாராக இருப்பார்கள். வாழ்க்கை துணையிடம் கூட எதிலும் விட்டுக் கொடுத்துப்போக மாட்டார்கள். எங்கேயும், எப்போதும் கொண்ட கொள்கையை விடாப்பிடியாக கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். குழந்தைகளை மிக சிறந்த முறையில் வளர்ப்பார்கள். தேவைக்கு அதிமான உடைகள், இன்ன பிற பொருட்களை சேர்த்து வைக்கும் பழக்கம் கார்த்திகை நட்சத்திரக்காரர்களிடம் அதிகம் காண முடியாது. பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வசதிகள் இருந்தாலும் எளிமையாக, யதார்த்தமாக இருப்பார்கள். தங்கள் சக்திக்கு முடிந்ததை எப்பாடு பட்டவாது செய்து முடிப்பதில் திறமையானவர்கள். வாழ்க்கையில் வீணான கனவுகள், கற்பனைகளில் நேரத்தை கடத்த மாட்டார்கள் கார்த்திகை நட்சத்திரத்தினர்.
அதீதமான தெய்வ பக்தி இருக்கும். அதே நேரம் அந்த தெய்வ பக்திக்கு நிகரான தாய், தாய் நாடு, தாய் மொழி பற்று, பாசம் இருக்கும். 33 வயது காலத்திற்கு பிறகு கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் வாழ்வில் ஏற்றங்கள் உண்டாகும். முன் பின் அறிமுகமில்லாதவர்களின் நட்பால் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும். மலேரியா, இதயநோய், ஒற்றைத் தலைவலி போன்ற நோய்கள் உங்களை பாதித்தாலும், மீண்டும் பழைய உடல் ஆரோக்கியத்தை பெறுவீர்கள். வாழ்வில் ஒரு தனிப் பாதையை அமைத்துக்கொண்டு பயணிக்கும் நீங்கள், நீண்ட காலம் வாழ்பவர்களாக கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள்.
சிறந்த பேச்சாற்றல் மற்றும் விவாதம் புரியும் திறன் இருக்கும். அதனால்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர், சிறந்த வழக்கறிஞராகவும், பள்ளி ஆசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் திகழ்கிறார்கள். ஒரு சிலர் மருத்துவர், மக்களுக்கு சமூக சேவை செய்யக்கூடிய பெரிய பதவியை வகிக்கும் தலைவர்கள், அதிகரிகளாகவும் இருப்பார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் பலர் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல. சித்தர்கள் மற்றும் அரசர்களில் சிலர் மேஷ ராசியில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என கூறப்படுகிறது.
2, 3, 4-ம் பாத, ரிஷப ராசியில் பிறக்கும் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் மக்களை வழிநடத்திச் தலைமை குணம் பெற்றிருப்பார்கள். பிறருக்கு பணிந்து செய்யும் வேலைகளை அதிக காலம் செய்ய மாட்டார்கள். அதையும் மீறி பணியிடங்களில் இவர்களின் மீது அதிகாரம் செலுத்தினால் உடனே வேலையிலிருந்து விலக தயங்க மாட்டார்கள். இந்த நட்சத்திரத்தினர் சிலர் மத்திய வயதில் சொந்த நிறுவனங்களை நிறுவி நடத்துவார்கள். குறிப்பாக உணவு, கெமிக்கல் சம்பந்தமான தொழில், வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்.
கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதம்:
இது குருவின் அம்சம் கொண்டது. இதில் பிறந்தவர்கள் செல்வத்தை விரும்புபவர்கள். நல்ல ஞானம் உள்ளவர்கள். தந்திரத்தால் வெல்பவர்கள். சுய கௌரவம் மிக்கவர். புகழை விரும்புபவர்கள்.
கிருத்திகை நட்சத்திரம் 2-ம் பாதம்:
இந்தப் பாதத்திற்கு சனி பகவானின் அம்சம் உண்டு. இதில் பிறந்தவர்கள் ஆசை, பாசம், பற்றுள்ளவர்கள். உயரிய நோக்கங்களை அடையப் போராடுபவர்கள். வீரம் மிக்கவர்கள், தற்பெருமை கொள்பவர்கள்.
கிருத்திகை நட்சத்திரம் 3-ம் பாதம்:
இதுவும் சனி பகவானின் அம்சமுடையது. இதில் பிறந்தவர்களுக்குப் பேராசை, பணவெறி, எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற விடாமுயற்சி, கோபம், பொறாமை, பழிவாங்கும் இயல்பு போன்றவை இருக்கும்.
கிருத்திகை நட்சத்திரம் 4-ம் பாதம்:
இது குருவின் ஆதிக்கம் உடையது. அடக்கம், ஒழுக்கம், நட்பு, பாசம் போன்ற நல்ல இயல்புகள் இதில் அடங்கும். தர்ம சிந்தனையும், இரக்க குணமும், தெய்வ பக்தியும் இந்தப் பாதத்தில் பிறந்தவர்களின் சிறப்பு அம்சங்கள்.