திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில் அடங்கும். இது ஒரே ஒரு நட்சத்திரம் தான். இதனை ஒரு விளக்கு அல்லது கண் விழிபோலக் கருதலாம். ‘சிவபெருமானின் ஒரு அம்சமான நடராஜப் பெருமான் அவதரித்த நட்சத்திரம்’ இது என்பார்கள். மார்கழி மாதம், திருவாதிரை அன்று சிவாலயங்களில் நடராஜப் பெருமானின் தரிசனமே ஆருத்ரா தரிசனம் எனப்படுகிறது.
நல்ல தோற்றம், அழகு, உடல் வலிமை உள்ளவர்கள். திடசித்தமும், எடுத்ததை முடிக்கும் ஆற்றலும் இருக்கும். இரக்கம், தயாள குணம், தர்ம சிந்தனை, பிறருக்கு உதவும் தன்மை இருக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்பவர்கள். கோப தாபம் இருக்கும். அவசரப்பட்டுச் செயல்களைச் செய்வார்கள். தவறு நேர்ந்தால், திருத்திக் கொள்வார்கள்.
திருவாதிரை நட்சத்திர சிறப்பியல்புகள்:
பண்டைய ஜோதிட நூல்களில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவருமே வாழ்வில் தாழ்மை நிலையை அடைவது இல்லை எனக் கூறுகிறது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பேச்சு இரட்டைத் தன்மை உடையதாக இருக்கும். ஒரு இடத்தில் ஒரு கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் இவர்கள், மற்றொரு இடத்தில் அக்கருத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பார்கள். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் பெரும்பான்மையான மக்களின் செல்வாக்கு பெறும் நிலைக்கு உயர்வார்கள். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்குமே தவிர, எதிரிகள் என்பவர்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் எல்லா வகையான உணர்வுகளையும் உடனே வெளிக்காட்டி விடுவார்கள்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் கடினமான நபர்களை போல் காணப்பட்டாலும், இவர்களிடம் நன்கு பழகிய பின்பு அவர்களின் இனிமையான குணங்களை பலர் தெரிந்து கொள்வார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சிப்பார்கள். தன்னை நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். தனக்கு ஒரு விடயம் தெரியவில்லை என்றாலும் அது குறித்து தெரிந்ததை போல் பேசி சமாளிப்பார்கள். திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சிறந்த அறிவாற்றல் இருக்கும் எடுத்துக்கொண்ட காரியங்களை முடிக்கும்வரை உணவு, தண்ணீர் கூட அருந்தாமல் உழைப்பார்கள். சற்று சுயநல குணங் இருந்தாலும் பிறருக்கு எத்தகைய உதவி செய்யவும் தயங்க மாட்டார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவார்கள். விவாதங்கள் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அடிக்கடி நண்பர்களுடனும், பிறருடனும் ஏதாவது ஒரு விடயத்தை பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். எந்த ஒரு விடயத்தையும் அது குறித்து ஒரு முறை விளக்கினாலே உடனடியாக கிரகித்துக் கொண்டு செயல்படும் சிந்தனையாற்றல், செயல்திறன் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு அதிகமுண்டு. எனவே பள்ளி, கல்லூரிகளில் கல்வியில் சிறந்து விளங்கி முதன்மையான மதிப்பெண்கள் எடுப்பார்கள்.
சிறந்த கற்பனை வளம் இருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுதல் போன்ற எழுத்தாற்றல் தேவைப்படும் துறைகளில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ ஆசைப் படுவார்கள். அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்வார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிலர் தங்களின் இளம் வயதிலிருந்தே குடும்பப் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்படுவார்கள். தங்களின் உறவினர், நண்பர்களை முகமலர்ச்சியோடு வரவேற்று அவர்களின் வயிறும், மனமும் குளிரும் வகையில் சிறப்பாக உபசரிப்பார்கள். உறவினர்களின் ஆதரவை மிகவும் விரும்புவார்கள். ரியல் எஸ்டேட், மனை விற்பனை, வீடுகள் வாங்கி விற்பது போன்ற தொழில்களில் சிறந்த லாபங்களை ஈட்டுவார்கள். தங்களின் வாழ்க்கைத் துணையை மிகவும் நேசிப்பார்கள். ஆன்மீகத்தில் மிகுதியான ஈடுபாடு இருக்கும். பல திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு நன்மை அடைவார்கள்.
திருவாதிரை நட்சத்திரம் 1 – ஆம் பாதம் திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் மீது குரு பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். எனவே இதில் பிறந்தவர்கள் பழமையான ஆச்சாரங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அனைத்து இடங்களிலும் ஒரு ஒழுக்கம், விதியைப் பின்பற்றி செயல்படுவார்கள். புதியவர்களிடம் கூட மிக இயல்பாக பழகும் குணம் கொண்டவர்கள். எதையும் நேர்பட பேசும்வர்களாக இருப்பார்கள். சற்று முரட்டு குணமும் இருக்கும். தலைமைப் பதவிகளை பெறுபவர்களாக இருப்பார்கள். பண்டைய சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து பண்டிதர்களாக இருப்பார்கள். தன்னை விட வயதில் மூத்தவர்களின் நட்பையும், வழிகாட்டுதலையும் அதிகம் விரும்புவார்கள். பிற மொழிகளை கற்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். சிறப்பான பேச்சாற்றல் இருக்கும். பட்டிமன்றம், விவாதம் போன்றவற்றில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலம் அடைவார்கள். ஒரு சிலர் ஆன்மீக சொற்பொழிவுகள் செய்து அதன் மூலம் செல்வமும், புகழும் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருப்பார்கள். இவர்களுக்குப் பொதுவாக இவர்களுக்கு குழந்தைகள் என்றாலே மிகவும் பிடிக்கும். அவர்களுடன் நேரம் செலவழிப்பதிலும், விளையாடுவதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
திருவாதிரை நட்சத்திரம் 2 – ஆம் பாதம் திருவாதிரை திருவாதிரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிரகமாக சனி பகவான் இருக்கிறார் இந்தப் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நேர்மை குணம் செயல்பாடும் அதிகம் இருக்கும் இந்த சூழ்நிலையிலும் சட்டதிட்டங்களை மீறாமல் நடப்பார்கள் இவர்களில் சிலருக்கு கூச்சசுபாவம் குணமிருக்கும் பெரும்பாலும் தனிமையை அதிகம் விரும்புபவர்கள் ஆக இருப்பார்கள் மிக நிதானமாக பேசுவார்கள் வாழ்வில் இன்பம் துன்பம் இது ஏற்பட்டாலும் சமநிலையை இழக்காமல் இருப்பார்கள் விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம் இருக்கும் ஒரு சிலர் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் புகழ் பெறுவார்கள் பெரும்பாலான நேரம் பொறுமையாக பேசினாலும் உணர்ச்சிவசப்படும்போது கடுமையாக பேசி பிறர் மனம் வருந்த செய்துவிடுவார்கள்.
திருவாதிரை நட்சத்திரம் 3 – ஆம் பாதம் திருவாதிரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தையும் சனிபகவானே ஆள்கிறார். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பல கஷ்டமான சூழ்நிலைகளை சந்திப்பார்கள். நெருங்கியவர்களின் துரோகச் செயலுக்கு உள்ளாவார்கள். கஷ்டங்களை அதிகம் சந்தித்தவர்கள் என்பதால் உறுதியான மனமும், பண்பட்ட குணமும் இருக்கும். எதிர்ப்பவர்களுக்கு அவர்களின் வழியிலேயே சிறந்த பாடங்களை புகட்டுவார்கள். மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். அதீத தெய்வ நம்பிக்கை இருக்கும். உண்மையான தெய்வ பக்தியால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்கிற எண்ணம் இவர்களிடம் அதிகம் இருக்கும். யோகிகள், சித்தர்கள், மகான்கள் பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு இருக்கும். இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு உடன் பிறந்த சகோதரர்களை காட்டிலும் சகோதரிகளே உதவிகரமாக இருப்பார்கள். பாரம்பரிய சிகிச்சை முறைகள், மருத்துவ மூலிகைகள் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.
திருவாதிரை நட்சத்திரம் 4 – ஆம் பாதம் திருவாதிரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தை ஆள்பவராக குருபகவான் இருக்கிறார். இந்த நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ கடாட்சம் நிரம்பியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் மூலம் பணம் மற்றும் இன்ன பிற பொருட்களின் லாபங்கள் ஏற்படும். அநியாயம், அக்கிரமங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். கொடுமை செய்தவர்கள், அநியாயக்காரர்களை அடக்கி ஒடுக்கி வைப்பார்கள். மக்கள் சேவை, மகேசன் சேவை என்கிற கொள்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் விவாதம் செய்து வெற்றி பெறுவதென்பது இயலாத காரியமாக இருக்கும். அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவிகளை பெறுவார்கள். அந்த பதவிகளை தங்களின் சுயநலத்திற்காக ஒரு போதும் பயன்படுத்த மாட்டார்கள். இந்தத் துறையில் ஈடுபட்டால் மக்களிடம் வெகு சீக்கிரத்தில் பிரபலம் அடைவார்கள். தங்களின் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை ஒழுக்கத்துடன் வளர்த்து அவர்களால் பெருமை அடைவார்கள். சமைக்கப்பட்ட உணவுகளை விட பழங்கள், பருப்புகள் போன்ற இயற்கையான உணவுகள் உண்பதை அதிகம் விரும்புவார்கள்.
திருவாதிரை நட்சத்திர பரிகாரங்கள்: திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் கெடுபலன்கள் ஏற்படுவதை குறைத்து நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படுவதற்கு செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் ராகு பகவானுக்கு செவ்வரளி பூக்களை சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி ராகு பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். பிரதோஷ தினங்களின் போது சிவபெருமானின் அபிஷேகத்திற்கு பால் தானம் தந்து வழிபட வேண்டும். தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் நன்மைகள் பல ஏற்படும்.
மாதந்தோறும் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. புற்று நோய், தொழு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள், ஆடைகள் தானம் அளிப்பதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். மாதத்தில் வரும் அஷ்டமி தினங்களில் பைரவர் கோயிலுக்கு பச்சை பயறு தானியங்களை தானமளிக்க வேண்டும். பைரவரின் அம்சமான நாய்களுக்கு அவ்வப்போது உணவளிப்பதாலும் உங்கள் நட்சத்திர தோஷங்கள் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திரத்திற்கு அதிர்ஷ்டம் தருபவை:
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி அதிர்ஷ்ட நிறங்கள் : இளம் பச்சை அதிர்ஷ்ட எண்கள் : 2, 6, 7 அதிர்ஷ்ட ரத்தினம் : கோமேதகம் அதிர்ஷ்ட நட்சத்திர பறவை : அன்றில் பறவை அதிர்ஷ்ட ஆங்கில எழுத்துகள் : K, G, N, C அதிர்ஷ்ட தெய்வம் : துர்க்கை அம்மன்