ரோகிணி நட்சத்திரம் பொதுவான குணங்கள்

தேர் வடிவில் அமைந்த 5 நக்ஷத்திரங் களின் கூட்டம் இது. ரிஷப ராசியில் சேரும் நக்ஷத்திரம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இந்த நக்ஷத்திரத்தில்தான் அவதரித்தார். இது ஒரு சிரேஷ்டமான நக்ஷத்திரம். இதன் ராசிநாதன் சுக்ரன், நக்ஷத்திர அதிபதி சந்திரன்.

பொதுவான குணங்கள்: இதில் பிறந்தவர்கள் சுதந்திரமானவர்கள். சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பவர்கள். பாசமுள்ளவர்கள். நேர்மையானவர்கள், சௌகர்யம், சௌபாக்யம் இரண்டிலும் ஆசை உள்ளவர்கள், தலைமை தாங்கும் திறமை, கோபதாபம் உள்ளவர்கள். பொதுவாக நல்லவர்கள். பிறர் நலம் விரும்புபவர்கள். மற்றவர்களைச் சார்ந்து வாழ்பவர்கள். இவை ரோகிணி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களாகும்.

ரோகிணி நட்சத்திர சிறப்பியல்புகள் பிரம்ம தேவரால் நிர்வகிக்கப்பட்டு, நிலவின் கோள் செல்வாக்கால் ரோகிணி நட்சத்திரம் வழிநடத்தப்படுகிறது. ரோகிணி நட்சத்திரம் உயிர்தன்மை, இயற்கை வளர்ச்சியின், உயிர்களின் பெருக்கம் ஆகிய குணாம்சங்களை வெளிப்படுத்துகிறது. இந்த ரோகிணி நட்சத்திரத்துடன் தொடர்புடைய சிவப்பு தன்மை, அதீத உற்சாகம் மற்றும் உற்சாகத்தின் பொதுவான தன்மையை வெளிப்படுத்துகிறது.

ரோகிணி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வெளிப்படையான அமைதி மற்றும் மென்மையான போக்கும் கொண்ட ஆளுமைகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு கவர்ச்சிகரமான முகம் மற்றும் இதர உடல்ரீதியான அம்சங்கள் இருக்கும். ஒரு சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக திருப்புவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். வார்த்தைகளை விட செய்கைகளின் மூலமாக பல விடயங்களை தெரியப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் சிறந்த கற்பனை வளமும், படைப்பாற்றல் திறன் இருக்கும் அதே நேரம் அதீத சிந்தனை மற்றும் மன சஞ்சலங்கள் காரணமாக. அமைதியற்ற நிலையும் ஏற்பட்டு தவிப்பார்கள் பல சமயங்களில் தங்களின் கற்பனை உலகத்தில் சஞ்சரித்து மனக்கோட்டை கட்டிக் கொண்டிருப்பார்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்களின் அழகு மற்றும் அலங்கார ஆடம்பர வாழ்க்கை பிறரை பொறாமைப்பட வைக்கும். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் கடினமாக உழைக்கும் குணம் கொண்டவர்கள். தங்களின் சிறந்த படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தால் வாழ்வில் உயர்ந்த நிலைகளை அடைவார்கள்.

எத்தகைய தவறுகளையும் பொறுத்துக் கொள்ளும் சகிப்புத் தன்மை இந்த ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு அதிகம். தனக்குப் பிறர் எவ்வளவு தீமைகள் செய்தாலும், அவர்களை பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் அவர்களுக்கு மீண்டும் உதவக்கூடிய பரோபகார மனம் கொண்டவர்கள் ரோகிணி நட்சத்திரக்காரர்கள். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திர பகவான் இருப்பதால் வெகு சுலபத்தில் பிறர் செய்த தவறுகளை மன்னித்து, மறப்பார்கள் மனதில் எத்தகைய வஞ்சத்தையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதையே அதிகம் விரும்புவார்கள். பிறரை மிரட்டும் தொனியில் ஒரு போதும் பேச மாட்டார்கள். எப்போதும் நேர்மையாக இருப்பதை விரும்புவார்கள். பேச்சில் ஒளிவு மறைவு என்பதே இருக்காது. கொடுத்த வாக்கை காப்பாற்றுபவராகவும், அளவற்ற செல்வம் கொண்ட வாழ்க்கையையும் வாழ்வார்கள். இவர்களில் சிலர் கவிதை, கட்டுரை, கதை, நாடகம் ஆகியவற்றை எழுதுவார்கள். ஜன வசீகரம் நிறைந்த நட்சத்திரம் என்பதால் திரைத் துறையில் பெரிய கலைஞர்களாக இருப்பார்கள்.

பள்ளி, கல்லூரி கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு, பாராட்டு பெறுவார்கள். எந்த ஒரு விடயத்திலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு அதிகம் இருக்கும். அதிலும் குறிப்பாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் தன் வாழ்க்கை துணையிடம் அனைத்து விடயங்களிலும் விட்டுக்கொடுத்துப் விட்டுக்கொடுத்து செல்பவர்காளாக இருப்பார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திறமையான சிற்பிகளாகவும், நடனம் மற்றும் இசை கலைஞர்கள், படைப்பாற்றல் இயக்குநர்களாக மாறிவிடுவார்கள்.

புகைப்படம் எடுத்தல், திரைப்பட எடிட்டிங் ஆகிய தொழில்களிலும் சிறந்து விளங்குபவர்களாக இருக்கிறார்கள்.மேலும் விவசாயம், சுற்றுச்சூழல் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். விளம்பர துறை, கதை எழுதுதல், மார்க்கெட்டிங் மற்றும் நகை வடிவமைத்தல் உட்பட தொழில்களில் மிகப்பெரிய உச்சங்களை தொடுவார்கள் .

ரோகிணி நட்சத்திரம் 1-ஆம் பாதம் :

ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்குரிய செவ்வாய் பகவானின் ஆளுகைக்குட்பட்ட வர்களாக இருக்கிறார்கள். சந்திரன், செவ்வாய் இந்த இரு கிரகங்களும் எதிர்ரெதிர் தன்மை கொண்டவை என்பதால் பெரும்பாலான நேரங்களில் மதில் மேல் பூனை போன்ற நிலையில் இருப்பார்கள். சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்கிற பேராவல் இருக்கும். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் கொடை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே நேரம் தேவையற்ற பொருட்களை வாங்கி பணத்தை வீணடிக்கவும் செய்வார்கள். இவர்களின் மனதில் எப்போதும் ஒரு போராட்டம் இருந்துகொண்டே இருக்கும். பூர்வீக சொத்துக்களை அனுபவிக்கும் யோகம் இந்தப் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிகம் உண்டு. இவர்களுக்கு காவல்துறை, ராணுவம் போன்ற துறையில் விருப்பம் இருக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் ரிஷ்ப ராசியின் அதிபதியான சுக்கிர பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக இருப்பதாலும் ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியான சந்திரன் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியில் உச்சம் அடைகிறார் என்பதாலும் இந்தப் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் செல்வ வளத்திற்கு என்றும் குறைவு ஏற்படாது. புதிய ஆடை, ஆபரணங்கள், சொகுசு வாகனம், வசதியான வீடு போன்றவை சிறு வயதிலேயே அனுபவிப்பார்கள். எந்த ஒரு விடயத்தையும் கலை ஆர்வத்தோடு ரசித்து செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். பிறரை கவரக் கூடிய அழகிய முகத்தோற்றம், கவர்ச்சியான உடல்வாகு கொண்டவர்களாக இருப்பார்கள். சாந்தமாகவே இருந்தாலும் நெருக்கடியான சமயங்களில் வீராவேசத்தோடு செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகம் கொண்டவர்கள். தர்ம சிந்தை, இரக்க குணம், பொது நலத்தில் ஈடுபாடு இந்த பாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும். எதையும் எளிதில் விரும்புவார்கள். விரும்பியது கிடைக்காவிட்டால் பெரும் துன்பம் அடைவார்கள்.

ரோகிணி நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தின் மீது மிதுன ராசிக்கு அதிபதியான புதன் பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். எனவே இந்த பாதத்தில் பிறந்த ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இயற்கையிலேயே சிறந்த சிந்தனைத்திறன் மற்றும் புத்திசாலித்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கணிதம், அறிவியல் போன்ற துறைகளில் மிகப்பெரும் சாதனைகள் செய்வார்கள். ஓவியம், சிற்பம், நடனம் இசை போன்ற கலைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். ஒரு சிலர் இக்கலைகளில் நிபுணத்துவம் பெற்று அதன் மூலம் பெரும் புகழும், பொருளும் ஈட்டுவார்கள். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் நடுத்தர வயதிற்குள்ளாகவே மிகப்பெரும் செல்வந்தர்களாக மிளிர்வார்கள்.

ரோகிணி நட்சத்திரத்தின் நான்காவது பாதம் இந்த நட்சத்திரத்தின் அதிபதியான சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டதாக இருக்கிறது. எனவே இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த கற்பனை வளமும், திடமான மனோபலம் கொண்டவர்களாக இருப்பார்கள். உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். மனம் விரும்புவதை அடைவது இவர்கள் நோக்கமாக இருக்கும். நல்லவர்கள், பிறர் நலம் கருதுபவர்கள், குடும்பப் பற்றுள்ளவர்கள், ஆசாபாசம் மிக்கவர்கள். பொறுமையாக இருந்து எதையும் சாதிக்க விரும்புபவர்கள். எதிர்பாலினத்தவர்களிடம் காதலில் ஈடுபடுபவர்களாகவும், பிற உயிர்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமிருக்கும். அரிசி, மருந்து, மீன் ஆகியவற்றின் தொடர்புடைய வியாபாரங்களில் மிகுதியான செல்வம் ஈட்டுவார்கள். ஒரு சிலர் அரசியல் துறையில் ஈடுபட்டு மிகப் பெரும் பதவிகளை அடைவார்கள். பயணங்களில் அதிக விருப்பம் உள்ளவர்கள். வெளிநாடுகளுக்கு சென்று புகழும், பொருளும் ஈட்டுபவர்களாக இருப்பார்கள்.

ரோகிணி நட்சத்திர பரிகாரங்கள் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான பலன்களை பெறுவதற்கு திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது உங்களின் வாழ்வில் சிறந்த பலன்களை உண்டாக்கும். மேலும் அதே திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் நவகிரக சந்நிதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு அரிசி நிவேதனம் வைத்து, மல்லிப்பூக்கள் சமர்ப்பித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் சந்திர பகவானின் நல்லருள் கிடைத்து உங்கள் வாழ்வில் பல யோகங்கள் உண்டாகும்.

முக்கியமான எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பாக உங்கள் தாயாரிடம் ஆசிர்வாதம் பெற்று செல்வது நன்மை உண்டாக்கும். கோயில் குளங்களில் உள்ள மீன்களுக்கு அவ்வப்போது பொரியை உணவாக அளிக்க வேண்டும். உங்கள் உறவுகளில் உள்ள திருமணம் ஆகா இளம் பெண்களுக்கு அவர்களின் பிறந்த நாள் மற்றும் வேறு எதாவது விஷேஷ தினங்களின் போது நைல் பாலிஷ். ஸ்டிக்கர் போட்டு, வாசனை திரவியங்கள் போன்றவற்றை தானமாக கொடுப்பது சிறப்பான பலனை அளிக்கும் ஒரு பரிகாரமாகும். மாதந்தோறும் வரும் ரோகிணி நட்சத்திர தினத்தன்று உங்கள் வாழ்க்கை துணையோடு கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவதால் உங்களின் இல்லற வாழ்வு சீரும் சிறப்புகமாக இருக்கும்.

வருடத்திற்கு ஒருமுறை நவகிரகங்களில் சந்திர பகவானுக்குரிய திருக்கோயில்களான திங்களூர், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் போன்றவற்றிற்கு சென்று வழிபட வேண்டும். எந்த ஒரு புதிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் பெற்ற தாயாரையும், தாய் வழி முன்னோர்களையும் வழிபட்டு தொடங்குவது சிறந்த வெற்றிகளைத் தரும். கோடைக்காலங்களில் மற்றும் கோவில் விழாக்களில் மக்களின் தாகத்தைத் தணிக்க மோர் பந்தல் அமைத்து, மோர் தானம் வழங்குவது நல்லது.

மேலும் வீட்டிற்கு வெளியே பசுக்கள், நாய்கள் போன்றவை தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நீர் தொட்டி அமைத்து, அதில் எப்போதும் நீர் ஊற்றி வைத்தது சிறப்பான பலன்களைத் தரும். ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தலவிருட்சமாக நாவல் பழ மரம் இருக்கிறது. நாவல் மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று நாவல் பழமரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது ரோகிணி நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை நீக்கும். மன நோயாளிகளுக்கு உணவு, ஆடை தானங்கள் போன்றவற்றை செய்வது சந்திர பகவானின் அருளாசி களைத் தரும் பரிகாரமாக இருக்கிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை: அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் அதிர்ஷ்ட திசை: மேற்கு அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள் : 2, 7, 8 அதிர்ஷ்ட ரத்தினம் : முத்து அதிர்ஷ்ட உலோகம்: வெள்ளி அதிர்ஷ்ட பறவை : ஆந்தை அதிர்ஷ்ட ஆங்கில எழுத்துகள் : O, V அதிர்ஷ்ட தெய்வம் : ஸ்ரீ கிருஷ்ணர்

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top