உத்திரம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

இது இரட்டை நட்சத்திரம். பூர நட்சத்திரம் போலவே இரு கண் விழிகள்போல் அமைந்தவை. நேர் கோட்டில் அமையாமல், சற்று ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்தவை. இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் கன்னி ராசியிலும் அமையும். முதல் பாதத்திற்கு ராசிநாதன் சூரியன். மற்ற மூன்று பாதங்களின் ராசிநாதன் புதன்.

பொதுவான குணங்கள்: திறமைசாலிகள். கல்வியறிவும், சமயோசித புத்தியும் கொண்டவர்கள். ஆசாபாசங்கள் அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும் இருக்கும். ‘தான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாத குணமும் உண்டு. தெய்வபக்தி, நேர்மை உள்ளவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம்: இந்தப் பாதத்தின் அதிபதி குருபகவான். அறிவாற்றல், திறமை, உழைப்பு, நியாய உணர்வு மிக்கவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடும், நம்பிக்கையும் இருக்கும். குருவை நாடி ஞானம் பெற நினைப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சூது, கபடம், பழிவாங்கும் வெறி போன்ற தீய குணங்கள் இருக்காது. அன்பும், பண்பும், சகோதர பாசமும் உள்ளவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: இதனை ஆட்சி செய்பவர் சனி. பொருளும், புகழும் சேர்ப்பதில் ஈடுபாடு மிக்கவர்கள். தலைமைக் குணங்கள் மேலோங்கி நிற்கும். சுயநலம் மிக்கவர்கள். அவசரக்காரர்கள். ஈட்டிய பொருளை இழந்து தவிப்பவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதற்கும் அதிபதி சனியே. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் இயல்பும் குணங்களும் இவர்களுக்கும் இருக்கும். கர்வம், ஆணவம், ‘தான்’ என்ற அகம்பாவம் மிக்கவர்கள். எனவே, பலரால் விரும்பப்படாதவர்கள். வெற்றிக்காக எதையும் செய்பவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் நான்காம் பாதம்: இதன் அதிபதி குரு. நிதானமானவர்கள். அடக்கமானவர்கள். வளைந்து கொடுத்து வாழத் தெரிந்தவர்கள். கல்வியில் சிறந்தவர்கள். திறமைசாலிகள். நல்ல உழைப்பாளிகள். தர்மசிந்தனை உள்ளவர்கள்.

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top